கூகுள் மேப்ஸ் தெரியும், அதுல இதெல்லாம் செய்ய முடியும்னு தெரியுமா?

Written By:

புதிய ஊர்களுக்குச் செல்லும் போது வழி தெரியாமல் எங்குச் சிக்கி கொண்டாலும், சாமர்த்தியமாகக் கண்டுபிடிக்க உதவும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கின்றது. இந்த ஆப் இண்டர்நெட் மற்றும் தான் சேகரித்த தகவல்களின் உதிவியுடன் நமக்கு உதவுகின்றது.

கூகுள் மேப்ஸ் செயலியில் பயனுள்ள பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் பலரும் அறிந்திராத சில முக்கிய அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வேகம்

நீங்கள் பயணிக்கும் சாலையில் நீங்கள் அதிகபட்ச வேகத்தினை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வெலோகிராப்டர் - மேப் ஸ்பீடு லிமிட் (Velociraptor - Map Speed Limit) என்ற செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும்.

விலை

சில காலமாக கோரப்பட்டு வந்த இந்த அம்சம் ஒரு வழியாகக் கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் வழங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம் புறப்படும் போதே குறிப்பிட்ட இடம் ஒன்றை நிறுத்தமாக செட் செய்து கொள்ள முடியும். மேலும் வழியில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் இடம் மற்றும் அவற்றில் விலைப் பட்டியல் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

காம்பஸ்

சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய காம்பஸ் ஐகானை இரு முறை அழுத்தினால் போதும். நீங்கள் திரும்பும் திசைகளைத் துல்லியமாக வழங்கும்.

லேபிள்

நீங்கள் ஏற்கனவே சென்ற இடத்தினை மை பிளேசஸ் அம்சத்தில் பதிவு செய்ய முடியும். லேபிள் எனும் புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் இல்லாத நீங்கள் நண்பருடன் பயணிக்கும் குறுக்கு வழிகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

மொபைல் போன்

கூகுள் மேப்ஸ் செயலியை கணினி மூலம் வழி தேடி அதே முகவரியை மொபைல் போனிலும் பெறக் கணினியில் தெரியும் சென்டு டூ போன் அம்சத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்குக் கணினி மற்றும் மொபைல் போனிலும் ஒரே கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Simple Google Maps tricks you need to know Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்