வாட்ஸ்ஆப் 'வாத்துமுட்டை'..!!

Posted by:

பிடிக்காத விஷயத்தை யாரும் கட்டாயப்படுத்த முடியாது, அதே போன்று பிடித்த விஷயத்தை யாரும் வெறுக்க வைக்கவும் முடியாது. ஒரு விஷயம் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. இந்த காரணங்கள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் வேறுபடும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோருக்கும் பிடித்தமான விஷயமாக இருப்பது ஸ்மார்ட்போன் என்று கூறும் அளவு தான் இன்றைய நிலைமை இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாட்ஸ்ஆப்

இன்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப் எனும் குறுந்தகவல் செயலியை பயன்படுத்தாமல் இல்லை என்றும் கூறலாம்.

சாட்சி

வாட்ஸ்ஆப் பயனாளிகளின் எண்ணிக்கையே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஆர்வ கோளாறு

ஒரு விஷயத்தை அதிகம் பயன்படுத்தும் போது அதன் மீது இனம் புரியாத ஆர்வம் அதிகரிக்கும், நாளடைவில் இந்த ஆர்வம் ஆர்வ கோளாறாக மாறினால் தான் ஆபத்து.

அடிமை

சில காலங்களுக்கு முன் ஸ்மார்ட்போன் மூலம் அனைவருக்கும் அறிமுகமான வாட்ஸ்ஆப் செயலிக்கு அடிமையானவர்கள் அடிக்கடி செய்யும் காரியங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ஞாபகம்

இன்று எத்தனை வாட்ஸ்ஆப் க்ரூப்களில் இணைந்திருக்கின்றீர்கள் என்பதை கண்டு கொள்ளவே மாட்டீர்கள்.

உருவாக்கம்

இவைகளில் பெரும்பாலான க்ரூப்கள் நீங்கள் உருவாக்கியதாகவே இருக்கும்.

கவனம்

நண்பர்களுடன் வெளியில் செல்லும் போதும் கூட அவ்வப்போது வாட்ஸ்ஆப் அப்டேட்களை சரி பார்த்து கொண்டிருப்பீர்கள்.

ஃபார்வேர்டு

புதிய நகைச்சுவை, வீடியோ மற்றும் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அவ்வப்போது அனுப்பி கொண்டே இருப்பீர்கள்.

பதில்

உங்களுக்கு வந்திருக்கும் அனைத்து குறுந்தகவல்களுக்கும் பதில் அளித்திருக்கின்றோமா என்பதை அடிக்கடி சரி பார்த்து கொண்டே இருக்க தோன்றும்.

புகைப்படம்

தினமும் ப்ரோஃபைல் புகைப்படத்தினை மாற்றி கொண்டே இருப்பீர்கள்.

எமோஜி

அனைத்து தகவல் பறிமாற்றங்களிலும் எமோஜிகளை அதிகம் பயன்படுத்துவது உங்களது வாடிக்கையாக இருக்கும்.

தூங்கும்

தினமும் உறங்கும் முன் நீங்கள் பார்க்கும் விஷயமாக வாட்ஸ்ஆப் இருக்கும்.

உறக்கம்

இதே போன்று தூங்கி எழுந்தவுடன் வாட்ஸ்ஆப் திரையை மட்டுமே பார்ப்பீர்கள்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
signs that you are addicted to Whatsapp. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்