அனானமஸ் நல்லதா கெட்டதா..??

By Meganathan
|

சமீபத்திய பாரீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இண்டர்நெட் மூலம் ஐஎஸ்ஐஎஸ் மீது போர் தொடுப்போம் என கூறிய பிரபல ஹேக்கர் பிரிவு தான் அனானமஸ். உலகளவில் இண்டர்நெட் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதில் தலைசிறந்த ஹேக்கர் பிரிவாக அறியப்படும் அனானமஸ் உண்மையில் யார், அவர்களின் பின்பலம் என்ன அவர்கள் செய்வது நல்லதா, கெட்டதா என்பனவற்றை விவரிக்கும் விரிவான தொகுப்பு தான் இது...

அனானமஸ்

அனானமஸ்

2004 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் இயங்கி வரும் ஹேக்கர் பிரிவு தான் அனானமஸ்.

ஹேக்கிங்

ஹேக்கிங்

ஹேக்கிங் செய்வது சட்ட விரோத செயல் என்பதால் ஒவ்வொரு உலக நாடுகளும் ஹேக்கிங் செய்வோருக்கு எதிராக வலுவான சட்ட அமைப்பை பின்பற்றி வருகின்றனர்.

அரசு

அரசு

ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் மிகப்பெரும் தலைவலியாக இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஹேக்கர்கள் என்றும் கூறலாம்.

செயல்

செயல்

நவீன மயமாகும் உலகில் ஹேக்கிங் அபாரமார வளர்ச்சியடைந்து வருகின்றது என்பது தான் உண்மை. இது போன்ற ஹேக்கிங் செயல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்றும் கூறலாம்.

வில்லன்

வில்லன்

ஹேக்கிங் எப்போதுமே மக்களுக்கு வில்லன்களாக இருப்பதில்லை என்பதற்கு அவ்வப்போது நிகழும் சில சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

அனானமஸ்

அனானமஸ்

இது போல் அனானமஸ் ஹேக்கிங் குழுவினர் செய்த சில நல்ல காரியங்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அவைகளை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

டிசம்பர் 2006

டிசம்பர் 2006

சூப்பமேசிஸ்ட் ரேடியோ நிகழ்ச்சியின் இணையதளத்தினை 2006 டிசம்பர் மாதம் அனானமஸ் குழுவினர் ஹேக் செய்தனர்.

ஜனவரி 2008

ஜனவரி 2008

2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ப்ராஜக்ட் சானாலோஜி எனும் தலைப்பில் சயின்டாலஜி எனும் கிறுஸ்துவ அமைப்பின் இணையதளங்களை முடக்கி பல்வேறு வகையில் அச்சுறுத்தல்களை அனானமஸ் நடத்தினர்.

பிப்ரவரி 2011

பிப்ரவரி 2011

பிரபவரி 2011 ஆம் ஆண்டில் பிரபல ஹேக்கிங் மன்றம் ஒன்றின் பல்வேறு தகவல்களை அனானமஸ் வெளியிட்டது. இந்த தகவல்கள் அமெரிக்கா மீது நடத்தப்பட இருந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலை தடுத்து நிறுத்த உதிவியது குறிப்பிடத்தக்கது.

பிர்பவரி 2011

பிர்பவரி 2011

2011 ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட்போரோ பாப்டிஸ்ட் சர்ச் இணையதளத்தை முடக்கியது அனானமஸ். இந்த சர்ச் அனைவரும் வெறுக்கும் படியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பரேஷன் டார்க்நெட்

ஆப்பரேஷன் டார்க்நெட்

குழந்தை ஆபாசங்களை எதிர்க்கும் திட்டத்தின் பெயர் தானண் ஆப்பரேஷன் டார்க்நெட். குழந்தை பாலின்பத்தை தூண்டும் படங்களை ஆன்லைனில் வெளியிடுவோரை முற்றிலுமாக முடக்க அனானமஸ் ஆப்பரேஷன் டார்க்நெட் திட்டத்தினை அக்டோபர் 2011 ஆம் ஆண்டு மேற்கொண்டது.

ஆகஸ்டு 2012

ஆகஸ்டு 2012

உகாண்டா நாட்டில் ஓரிணச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதை எதிர்த்து அனானமஸ் அரசு சார்ந்த இணைதளங்களை முடக்கியது.

கொரியா

கொரியா

கொரிய அரசாங்கத்தை எதிர்த்து சில தீர்மாணங்களோடு ஆரம்பித்த அனானமஸ் போராட்டத்தின் விளைவானது அரசு இணையதளங்களை முடக்கியதோடு அதன் தகவல்களையும் வெளியிட்டதில் நிறைவுற்றது.

ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

தற்சமயம் அனானமஸ் உலகளவில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த இணையதளங்கள், சமூக வலைதள கணக்குகள் போன்றவைகளை முடக்குவதில் ஈடுப்பட்டு வருகின்றது.

முடிவு

முடிவு

ஹேக்கிங் என எடுத்து கொண்டால் உலகளவில் அனானமஸ் மூலம் உலக மக்களுக்கு நன்மை, தீமை என இரண்டும் நடந்துள்ளது எனலாம். எனினும் அனானமஸ் நல்லவர்களா, அல்லது கெட்டவர்களா என்பதை இதில் சம்பந்தப்பட்ட அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Shocking Things That Anonymous Has Done Till now. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X