அட இதுக்கா வெப்கேம் கண்டுபுடிச்சாங்க.?

By Meganathan
|

வெப்கேம் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. கணினியுடன் இணைக்கப்பட்ட கேமரா மூலம் வேறு ஒரு இடத்தில் இருக்கும் மற்றொரு கணினியுடன் இண்டர்நெட் வசதியுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வெப் கேமரா வழி செய்யும்.

அது சரி வெப்கேம் முதன் முதலில் எதற்கு கண்டு பிடிச்சாங்க'னு யாருக்காவது தெரியுமா.??

அதிகம் பேருக்கு இந்த ரகசியம் தெரிந்திட வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். வெப்கேம் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது என்ற ரகசியத்தை தெரிஞ்சிக்க ஸ்லைடர்களை பாருங்கள்..

கேம்பிரிட்ச்

கேம்பிரிட்ச்

லண்டனில் அமைந்திருக்கும் கேம்பிரிட்ச் பல்கலைக்கழக மாணவர்கள் வெப்கேம் கண்டுபிடிக்க காரணம் குளம்பி ( காப்பி ) இயந்திரம் தான்.

ட்ரோஜன் அறை

ட்ரோஜன் அறை

கேம்பிரிட்ச் கம்ப்யூட்டரின் ட்ரோஜன் அறைக்கு வெளியில் இருந்த குளம்பி இயந்திரம் தான் வெப்கேம் கண்டுபிடிக்க முக்கிய காரணம் ஆகும்.

கோபம்

கோபம்

1991 ஆம் ஆண்டு குளம்பி அருந்த மாணவர்கள் ட்ரோஜன் அறைக்கு சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. சில சமயங்களில் குளம்பி இல்லாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்ததோடு கோபத்திற்கும் தள்ளப்பட்டனர். எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் போது யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும்.

தீர்வு

தீர்வு

இப்பிரச்சனைத்து தீர்வு காணும் நோக்கில் குளம்பி இயந்திரத்தில் ரிமோட் கேமரா ஒன்றை பொருத்த டாக்டர். க்வென்டின் ஸ்டஃபோர்டு ஃபிரேசர் மற்றும் பால் ஜார்டெட்ஸ்கி முடிவு செய்தனர்.

விளைவு

விளைவு

இதன் விளைவாக குளம்பி இயந்திரத்தில் வைக்கப்பட்ட கேமரா தான் உலகின் முதல் வெப்கேமரா ஆகும். இந்த கேமராவானது ஆய்வுக்கூடத்தில் இருந்த பழைய கணினியோடு இணைக்கப்பட்டது.

படம்

படம்

இந்த வெப்கேமராவானது நொடிக்கு ஒரு ஃபிரேம் வீதம் க்ரேஸ்கேல் புகைப்படங்களை 129*129 பிக்சல் தரத்தில் வழங்கியது.

இணையம்

இணையம்

நவம்பர் 22, 1993 ஆம் ஆண்டு டாக்டர் மார்டின் ஜான்சன் வெப்கேமராவை வேல்டு வைடு வெப் தளத்தில் அறிமுகம் செய்தார்.

 பிரபலம்

பிரபலம்

டாக்டர் ஜான்சன் கண்டறிந்த கேமராவினை கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் நெட்வர்க்களில் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் இந்த கேமரா குறித்த தகவல்கள் மேகமாக பரவ, கேமரா பொருத்தப்பட்ட குளம்பி இயந்திரத்தை பார்க்க உலகமே முயற்சி செய்தது.

சர்ச்சை

சர்ச்சை

பின் அதிகப்படியான சர்ச்சைகளை தொடர்ந்து ஆகஸ்டு 2001 ஆம் ஆண்டில் இந்த வெப் கேமரா ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. பின் இந்த குளம்பி இயந்திரம் ஈபே மூலம் ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Best Mobiles in India

Read more about:
English summary
Shocking Reason why The First Webcam Was Invented Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X