ஆப்பிள் கேம்பஸ், நிஜமாகும் ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு.!?

Written By:

உலகின் பணக்கார தொழில்நுட்ப நிறுவனமாகவும், பிரபல ஸ்மார்ட்போன் பிரான்ட் ஆகவும் ஆப்பிள் நிறுவனம் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக ஆப்பிள் கேம்பஸ் 2 அதாவது ஆப்பிள் வளாகம் இருக்கின்றது. ஆப்பிள் வளாகம் என்றதும் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

ஆப்பிள் கேம்பஸ் 2 அல்லது விண்கலம் என அழைக்கப்படும் புதிய ஆப்பிள் வளாகம் குறித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் தகவல்களை தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் கேம்பஸ் 2 ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்தது. அதிநவீன அம்சங்களுடன் தயாராகும் இந்த வளாகம் நார்மன் ஃபோர்ஸ்டர் வடிவமைப்பில் உருவாகின்றது.

வளைந்த கண்ணாடி

புதிய ஆப்பிள் வளாகத்தின் இருபுறமும் வளைந்த கண்ணாடிகளால் கட்டமைக்கப்படுகின்றன. இவை சுமார் 3000 வளைந்த கண்ணாடிகளின் மூலம் தயாரிக்கப்பட்டதாகும்.

மண்டபம்

இந்தக் கட்டிடத்தின் தரைதளத்தில் மிகப்பெரிய மண்டம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1000 பேருக்கு இடமளிக்கும் அளவு பெரியதாகும். எதிர்கால ஆப்பிள் கருவிகள் அனைத்தும் இங்கேயே அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

பசுமை

ஆப்பிள் வளாகத்தின் 80% பகுதி முழுக்க மரம், செடி கொடிகளால் நிரம்பியிருக்கும். இதோடு ஆப்பிள் நிறுவனம் இந்த வளாகத்தில் மொத்தம் சுமார் 7000 மரங்களை நட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்சாரம்

இந்த வளாகம் முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு சக்தியூட்டப்பட இருக்கின்றது. உயிரி எரிபொருள் மற்றும் சூரிய தகடுகளால் சக்தியூட்டப்படுகின்றது.

குளிர்சாதன வசதி

கலிஃபோர்னியாவின் இயற்கை சூழல் மற்றும் இந்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் 4300 மையப்படுத்திய கான்கிரீட் அடுக்குகளால் வளாகத்தில் ஒரு ஆண்டு முழுக்க எவ்வித குளிர்சாதன வசதிகள் தேவையில்லை.

நீர்

ஆப்பிள் கேம்பஸ் 2 வளாகம் முழுக்க நாள் ஒன்றிற்கு சுமார் 600,000 லிட்டர் நீர் தேவைப்படும், இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரினை பயன்படுத்தும்.

சைக்கிள்

ஆப்பிள் வளாகத்தினுள் பயணிக்க அந்நிறுவனம் வழங்கும் 1000 சைக்கிள்களை மட்டுமே ஊழியர்கள் பயன்படுத்துவர்.

மதிப்பு

ஆப்பிள் கேம்பஸ் 2 வளாகத்தின் கட்டமைப்பு மதிப்பு மட்டும் $500 கோடி ஆகும்.

நிறுத்தம்

ஆப்பிள் வளாகத்தைச் சுத்தமாக வைக்க அந்நிறுவனம் நிலத்தடியில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடம் அமைக்கின்றது. இங்கு சுமார் 10,980 மகிழுந்துகளை நிறுத்தி வைக்க முடியும். மின்சார மகிழுந்துகளை சக்தியூட்டும் இயந்திரங்களும் நிறுவப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Shocking Facts About The New Apple Campus Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்