அதிர்ச்சி : கொலைகார சுறாவை மிஞ்சியது செல்பீ..!

|

இந்த ஆண்டில் இதுவரை கடல் கொலையாளியான சுறா தாக்குதல் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கையை விட, செல்பீ எடுக்க முயன்று இறந்து போனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு உள்ளது அமெரிக்க ஆன்லைன் பத்திரிக்கையான ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post).

'பாம்பு' செல்பீ : தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்..!

அதிர்ச்சி : கொலைகார சுறாவை மிஞ்சியது செல்பீ..!

அதாவது தற்போது வரை 8 பேர் சுறா தாக்குதலில் இறந்துள்ளனர், ஆனால் 12 பேர் செல்பீ எடுக்க முயற்சி செய்யும் போது இறந்துள்ளனர் என்கின்றது அந்த ஆய்வு. அந்த ஆய்வின் முடிவின் படி, சுறா மூலம் இறந்தவர்களை விட செல்பீ மூலம் இறந்தவர்கள் தான் அதிகம் என்கிறது ஹஃப்பிங்டன் போஸ்ட் ரிப்போர்ட்.

உலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..!

அதிர்ச்சி : கொலைகார சுறாவை மிஞ்சியது செல்பீ..!

சமீபத்தில் இந்தியாவின் தாஜ் மஹாலை சுற்றி ப் பார்க்க வந்த 66 வயது ஜப்பானியார் ஒருவர் படியின் மீது நின்றுகொண்டு செல்பீ எடுக்க முயலும் போது தவறி விழுந்து இறந்ததும், கடந்த ஜூலை அன்று மிஸ்ஸிசிப்பியில் உள்ள மிருக காட்சி சாலையில் காட்டெருமை ஒன்றுடன் செல்பீ எடுக்க முயன்ற போது தாக்கப்பட்டு பெண் ஒருவர் இறந்து போனதும் குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
More people have died while trying to taking a 'selfie' than from shark attacks this year. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X