செல்பீ எடுத்தால் உடல் எடை குறையும்.!!

Written By:

எல்லா கேங்'லையும் அதிகளவு செல்பீ எடுக்கும் நபர் நிச்சயம் இருப்பதைப் போல் அவரைக் கிண்டல் செய்பவரும் நிச்சயம் இருக்கத் தான் செய்வர். செல்பீ எடுத்துக் கிண்டலுக்கு ஆளாவதில் நீங்கள் ஒருவர் என்றால் இந்தத் தொகுப்பு உங்களுக்கானது தான்.

செல்பீ எடுக்கும் போது யாரேனும் உங்களைக் கிண்டல் செய்தால், செல்பீ எடுத்தால் உடல் எடை குறையும் எனத் தைரியமாக சொல்லுங்கள். செல்பீ எடுத்தால் உடல் எடை குறையும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்புங்க பாஸ், செல்பீ எடுத்தால் உடல் எடை தானாக குறையும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆய்வு

கொலம்பியாவின் அலிகேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 271 பேர் பங்கேற்றனர். இவர்கள் உடல் பருமன் மூலம் பாதிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கம்

ஆய்வில் பங்கேற்றோர் தங்களது உடல் எடையைக் குறைக்க தூண்டுகோலாக இருப்பதை அறிவதே ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அளவீடு

ஆய்வில் பங்கேற்றோரின் உடல் எடை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் குறிக்கப்பட்ட அவர்களின் புகைப்படங்களும் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 16 வாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புகைப்படம்

உடல் மெலிந்திருப்பதை தங்களின் சுய புகைப்படங்களை பார்த்தது ஆய்வில் பங்கேற்றோருக்கு அதிக தூண்டு கோளாக இருந்தது, இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புகைப்படம்

ஒருவரின் சுய புகைப்படம் உடல் எடையைக் குறைக்க உண்மையான ஆதாரமாகவும், அதிக பட்ச தூண்டுகோலாகவும் இருக்கின்றது. உடல் எடையைக் குறைக்க புகைப்படமே உடல் நிறை குறியீட்டெண்ணை விடச் சிறப்பாக வேலை செய்கின்றது.

செல்பீ

அடிக்கடி உடல் எடையைச் சரி பார்ப்பதை விடத் தினசரி அடிப்படையில் செல்பீ எடுப்பது உடலை மெருகேற்றச் சிறப்பான வழியாக இருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Selfies Can Help You to Lose Weight Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்