சாம்சங் Z1 டைஸன் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,700

Written By:

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் Z1, டைஸன் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த வாரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று முகநூலில் இதற்கான புகைப்படங்களோடு, இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் Z1 டைஸன் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,700

முன்னதாக கிடைத்த தகவலின் படி சாம்சங் Z1 விலை ரூ.5,700 என தெரிவிக்கப்பட்டது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல் சிம், 4 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

டைஸன் 2.3 ஓஎஸ் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத்4.0 இருப்பதோடு 1500 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung Z1 Tizen Smartphone to Launch This Week. Samsung Z1, the long-anticipated Tizen OS-based smartphone from the South Korean tech firm, may hit Indian retail this week.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்