உஷார் உளவு பார்க்கும் சாம்சங் ஸ்மார்ட் டிவி.!!

By Meganathan
|

சாம்சங் ஸ்மார்ட் டிவி உங்களை உளவு பார்க்கின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தி டெய்லி பீஸ்ட் தளம் வெளியிட்டதை தொடர்ந்து இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. சாம்சங் நிறுவனத்தின் குறிப்பு துருப்பில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களை டெய்லி பீஸ்ட் குறிப்பிட்டிருந்தது.

 உஷார் உளவு பார்க்கும் சாம்சங் ஸ்மார்ட் டிவி.!!

சாம்சங் நிறுவனத்தின் குறிப்பு துருப்பில் வாய்ஸ் ரிகஃனீஷன் திறன் கொண்ட ஸ்மார்ட் டிவி பயனர் பேசும் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து ஆன்லைன் மூலம் மூன்றாவது நபருடன் பகிர்ந்து கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அம்சம் சற்றே அச்சத்தை ஏற்படுத்தினாலும், இது போல பல்வேறு கருவிகளும் குரல் சார்ந்த அம்சங்களை வழங்குவதோடு உங்களது பேச்சுகளை கேட்கலாம். மோட்டோ எக்ஸ், நெக்சஸ் கருவிகள், அமேசான் எக்கோ, மைக்ரோசாப்ட் கைனக்ட் மற்றும் ஐபோன் போன்றவைகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 உஷார் உளவு பார்க்கும் சாம்சங் ஸ்மார்ட் டிவி.!!

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க சாம்சங் ஸ்மார்ட் டிவி செட்டிங்ஸ் சென்று வாய்ஸ் ரெகஃனீஷன் அம்சத்தை ஆஃப் செய்து வைக்கலாம்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung smart TV may be listening to you Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X