Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஒரு மணி நேரத்திற்கு 21 ஆயிரம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

Updated: Tuesday, March 26, 2013, 9:03 [IST]

samsung sells nearly 21000 phones per hour

ஸ்மார்ட்போன் உலகில் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சாம்சங் நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு 21 ஆயிரம் மொபைல்களை விற்பனை செய்கிறது.

இந்த செய்தி மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் நாடி துடிப்பையும் எகிற வைக்கும் ஓர் ரிப்போர்ட் என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் இந்த தகவல் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ப்ளஸ்.

சாம்சங் நிறுவனத்தின் இந்த திபுதிபு முன்னேற்றம், மொபைல் உலகில் தனி சாம்ராஜ்ஜியம் படைத்து வந்த நோக்கியா நிறுவனத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டது என்றது தான் சொல்ல வேண்டும்.

அதிலும் இந்த ஆண்டு முதல் காலாண்டான ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்குள் 360 கோடி விற்பனையை கொடுத்துள்ளது. இதன் மூலம் 73% சதவிகித வருவாயை ஈட்டி உள்ளது சாம்சங்.

இந்த ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்குள் ஒரு மணி நேரத்தில் 21 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் என்ற கணக்கில் 4.45 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 30.6% மார்கெட் பங்குகளை பெற்றுள்ளது என்பது மிக பெரிய சாதனை தான்.

ஆப்பிள் நிறுவனம் முதல் காலாண்டில் 3.51 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, 24.1 மார்கெட் பங்குகளை பெற்றுள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையையெல்லாம் சாம்சங் நிறுவனம் எடுத்து விழுங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

நோக்கியா நிறுவனம் பின்லாந்தில் தனது மொபைல் தொழிற்சாலையினை இழுத்து மூடுகிறது என்ற செய்தி நேற்று வெளியானது. இன்று சாம்சங் நிறுவனத்தின், சாதனை பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் சாம்சங் நிறுவனத்தின் அதிர வைக்கும் இந்த சாதனைகள், நோக்கியா போன்ற முதன்மை நிறுவனத்தினையும் கொஞ்சம் ஆட்டம் காண செய்கிறது.

நோக்கியா தனது ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதித்துவிட்டால், சாம்சங், நோக்கியா மற்றும் ஆப்பிள் ஆகிய  நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் போட்டி, தொழில் நுட்ப உலகிற்கு சிறப்பான முன்னேற்றத்தினை கொடுக்கும் என்று தான் தோன்றுகிறது.

Story first published:  Tuesday, June 26, 2012, 12:32 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll