திடீரென வெடித்து சிதறியது சாம்சங் கேலக்ஸி ஏஸ் ஸ்மார்ட்போன்

By Meganathan
|

ஆன்டாரியோ பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் உறங்கி கொண்டிருந்த போது தனது சாம்சங் கேலக்ஸி ஏஸ் போன் வெடித்து சிதறியதாக கூறியுள்ளார். இந்நிகழ்வு அக்டோபர் மாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

  வெடித்து சிதறிய சாம்சங் கேலக்ஸி ஏஸ்

இது குறித்து ஹோப் காஸர்லி கூறும் போது அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வெடித்த சத்தம் கேட்டு எழுந்ததோடு போன் எனக்கு பின்புறம் இருந்தது, வெடுக்கும் போது அதிலி இருந்து நெறுப்பு வெளியேறி சுவரில் அடித்து கட்டிலில் விழுந்தது என்று அவர் தெரிவித்தார்.அதன் பின் கட்டிலில் தீப்பிடித்தது பின் தலையனை கொண்டு அந்த நெறுப்பை அனைத்தேன், அதுவரை என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது என்று அவர் கூறினார்.

[ஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்]

வெடித்த போன் சார்ஜரிலும் இல்லை, இந்த விஷயத்தை சாம்சங் நிறுவனத்திடம் கூறியதற்கு சாம்சங் தரப்பில் இருந்து மாற்று போன் அனுப்பப்பட்டுள்ளதோடு எதனால் போன் வெடித்தது என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

  வெடித்து சிதறிய சாம்சங் கேலக்ஸி ஏஸ்

இது குறித்து சாம்சங் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெடித்த போனில் சாம்சங் நிறுவனத்தின் பேட்டரி பயன்படுத்தப்படவில்லை, வாடிக்கையாளர்கள் அனைவரும் சாம்சங் பேட்டரிகளை மட்டும் பயன்படுத்தினால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung phone explodes next to girl. An Ontario University student revealed that her Samsung Galaxy Ace phone exploded next to her while she was sleeping.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X