இந்தியாவில் முதலிடத்தை இழக்கும் முன்னணி நிறுவனம்!

Written By:

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் சுமார் 25% வரை விற்பனை சரிவு காரணமாகத் தனது முதலிடத்தை இழக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கேலக்ஸி நோட் 7 கருவியின் பிரச்சனை காரணமாக விற்பனை நிறுத்தம் போன்றவை தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் முதலிடத்தை இழக்கும் முன்னணி நிறுவனம்!

உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி நோட் 7 கருவிகளின் விற்பனை, எக்ஸ்சேன்ஜ் போன்றவற்றை நிறுத்தியுள்ளதோடு கருவிகளை தயாரிப்பதை நிறுத்த முடிவு செய்து வருவதாக சாம்சங் சார்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களின் விற்பனையைப் பொருத்த வரை சாம்சங் நிறுவனம் சுமார் 20-25% வரை விற்பனை சரிவை சந்திக்கக் கூடும் எனத் தொழில்துறை வட்டாரங்களைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் 60% பங்குகளை எட்ட இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தியாவில் முதலிடத்தை இழக்கும் முன்னணி நிறுவனம்!

ஜனவரி-மார்ச் மாத காலகட்டத்தில் சாம்சங் நிறுவனம் பிரீமியம் செக்மண்ட் சந்தையில் 62% பங்கு வகித்தது, ஆப்பிள் நிறுவனம் 37% பங்குகளை வைத்திருந்தது. இதுவே ஜூன் இறுதி காலாண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் 47% மற்றும் சாம்சங் நிறுவனம் 49% பங்குகளைக் கொண்டிருந்தது என கவுண்ட்டர் பாயின்ட் ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

ஆகஸ்டு மாதத்தைப் பொருத்த வரை சாம்சங் நிறுவனம் 57% பிரீமியம் செக்மண்ட் பங்குகளையும், ஆப்பிள் நிறுவனம் 32% பங்குகளையும் கொண்டிருந்ததாக சைபர் மீடியா ரிசர்ச் தகவல் தெரிவிக்கின்றது. இந்தப் பட்டியல் அப்படியே மாறி ஆப்பிள் நிறுவனம் முதலிடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung may lose its No. 1 position in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்