256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு அறிமுகம் செய்த சாம்சங்.!!

Written By:

சாம்சங் நிறுவனம் இவோ ப்ளஸ் 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு வெளியிட்டுள்ளது. அமெரிக்க டாலர்களில் $249.99 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.16,730 ஆகும். சாம்சங் நிறுவனம் கூறும் போது இந்த மைக்ரோ எஸ்டி கார்டில் 12 மணி நேர 4கே யுஎச்டி அல்லது ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட 33 மணி நேர ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்து வைத்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

சாம்சங் நிறுவனத்தின் V-NAND தொழில்நுட்பம் சார்ந்த உருவாக்கப்பட்டுள்ள இவோ ப்ளஸ் 256ஜிபி கார்டு தகவல்களை சுமார் 95MB/s மற்றும் 90MB/s வேகத்தில் பரிமாற்றம் செய்ய முடியும்.

2

இதன் மூலம் அதிக துல்லியம் கொண்ட புகைப்படங்களையும், விர்ச்சுவல் ரியால்டி சார்ந்த தரவுகளையும் சேமித்து வைக்க முடியும்.

3

மேலும் இந்த மைக்ரோ எஸ்டி கார்டு யுஎச்எஸ்-1, கிளாஸ் 10, வாட்டர் ப்ரூஃப், உள்ளிட்ட சில அம்சங்களை கொண்டிருக்கின்றது.

4

சாம்சங் நிறுவனம் இவோ ப்ளஸ் 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை சுமார் 10 வருட வாரண்டியுடன் வழங்குகின்றது. இச்சலுகையானது உலகெங்கும் சுமார் 50 நாடுகளில் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

5

256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு வகைகளின் தயாரிப்பு பணிகள் மார்ச் மாதம் துவங்கியது. இந்த கார்டுகள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

6

சாம்சங் 256ஜிபி கார்டுகள் யுனிவர்சல் ப்ளாஷ் ஸ்டோரேஜ் 2.0 முறையை சார்ந்திருப்பதால் எஸ்எஸ்டி வகையில் தகவல்களை சுமார் 850/250Mbps வேகத்தில் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Samsung launched 256GB microSD card Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்