கேலக்ஸி நோட் 7 கருவிகளைப் பத்திரமாக திரும்பப் பெற சாம்சங் வித்தியாச முயற்சி!

Written By:

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 கருவிகளை திரும்பப் பெற ஃபயர்ப்ரூஃப் எனப்படும் தீப்புகாத பெட்டிகள் மற்றும் கையில் தீக்காயம் ஏற்படாதளவு பாதுகாப்பான கையுறை போன்றவற்றை அனுப்பி வருகின்றது. உலகம் முழுக்க அந்நிறுவனம் விற்பனை செய்த கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோட் 7 கருவிகளைப் பத்திரமாக திரும்பப் பெற சாம்சங் வித்தியாச முயற்சி!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கருவியின் தயாரிப்பு பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சரி செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 7 கருவிகளின் பேட்டரிகளும் வெடித்ததால் அந்நிறுவனம் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 7 கருவிகளை இணையதளம் மூலம் வாங்கிய பனர்களுக்கு ஃபயர்ப்ரூஃப் ரிட்டன் கிட் அனுப்பி வருகின்றோம் என சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் சார்பில் அனுப்பப்பட்ட ஃபயர்ப்ரூஃப் ரிட்டன் கிட் குறித்த வீடியோவினை கீழே பாருங்கள்..

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


முகநூலில் எங்கள் செய்திகளை ளிக் செய்யவும்


Read more about:
English summary
Samsung Is Giving Fireproof Boxes, Gloves For Those Who Return Note 7
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்