வரப்போகுது "அதிக உறுதியோடு"-சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 4.!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 4 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written By:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அத்துணை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன.மேலும் தாங்கள் அடுத்ததாக வெளியிடப்போகும் தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்துகின்றன.அந்நிகழ்வில்,சாம்சங் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனை வெளியிடக்கூடுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.டேப் உள்ளிட்ட சில தயாரிப்புகளை மட்டுமே வெளியிட்டது.

இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் ஜெர்மன் அதிகாரப்பூர்வ இணையதளம் சாம்சங் கேலக்ஸி எக்ஸ் கவர் 4 குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த விரிவான தகவல்கள் கீழே.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 4:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடப்படக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்சி எஸ் 8 ஆனது வெளியிடப்படாத சூழலில்,சாம்சங் நிறுவனத்தின் ஜெர்மன் இணையதளம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறுதித்தன்மை:

சாம்சங் கேலக்ஸி எக்ஸ் கவர் 4 ஆனது எம்ஐஎல்-எஸ்டிடி தரச் சான்று பெற்று அதிக அளவிலான உறுதித்தன்மை கொண்டும் அதாவது உயர் மற்றும் குறைந்த அளவிலான வெப்பநிலை,கைதவறி கீழே விழுதல் உள்ளிட்ட எல்லா சூழல்களையும் சமாளிக்கிற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் நீரில் 1மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை எவ்வித சேதாரமுமின்றி இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஹோம் பட்டன்,நாவிகேஷன் பட்டன்,மல்டி டாஸ்கிங் பட்டன் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக்கொண்டு வெளிவருகிறது.

அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 4 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்,டச் விஸ் ஸ்கின் ஆன் டாப்,4.99 இன்ச் 720x1280 பிக்சல்ஸ் டிஎப்டி டிஸ்பிளே,64 பிட் 1.4 ஜிஎச்இசட் குவாட் கோர் எக்சைநோஸ் 7570 ப்ரோசஸர்,2ஜிபி ரேம்,16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வெளிவரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா மற்றும் பேட்டரி:

சாம்சங் கேலக்சி எக்ஸ்கவர் 4,13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா வினையும் கொண்டிருக்கும்.பேட்டரியைப் பொறுத்த மட்டில் இது 2800 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரியைக்கொண்டும்,172 கிராம் எடையுடனும் வெளிவரக்கூடும்.

எப்போது வெளியாகும்:

நீர் மற்றும் தூசு ரெசிடன்ஸ்,அதிகப்படியான உறுதித்தன்மை உள்ளிட அம்சங்களைக் கொண்ட சாம்சங் கேலக்ஸி எக்ஸ் கவர் 4 ரூபாய் 18,200 விலையும்,ப்ளாக் நிறத்திலும் யுரோப்பில் ஏப்ரல் மாத மத்தியில் வெளிவரக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

அதிரடியான விலைக்குறைப்புடன் 'சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ'- நாளை முதல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Samsung Galaxy Xcover 4 Rugged Smartphone With Android 7.0 Nougat Launched.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்