ஒருவழியாக.. சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் கருவிகளின் அம்சங்கள்.!

தகவல்களின்படி இதுவே சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் இறுதியான அம்சங்களாகலாம்.

|

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப தலைப்புபில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி சார்ந்த பல கசிவுகள் மற்றும் வதந்திகள் அனைத்து இணையதளங்களிலும் சுற்றி வந்த வண்ணம் உள்ளன. இக்கருவி சார்ந்த பல வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கும் போதும், இந்த வரவிருக்கும் முதன்மைகருவி சார்ந்த சில அம்சங்கள் நிச்சயமாக இறுதி வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அப்படியாக இன்று கேலக்ஸி எஸ்8 பற்றி கொரிய ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளியான அம்சங்களை பற்றி இந்த தொகுப்பில் காண உள்ளோம் .ஒருவேளை இதுவே எஸ்8 கருவியின் இறுதி குறிப்புகளாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டூவல் கேமிரா

டூவல் கேமிரா

வெளியான அறிக்கையின்படி கேலக்ஸி எஸ்8 கருவியில் தொழில்நுட்ப செலவு காரணமாக டூவல் கேமிரா இருக்காது என்று அறிவிக்கப் பட்டுள்ளது மறுபக்கம் எஸ்8 ப்ளஸ் கருவியின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கிறது. அதாவது ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போலவே.

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

உடன் முந்தைய வதந்திகளுக்கு ஏற்ப, கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் அக்கருவிகளில் ஹோம் பட்டன் வர வாய்ப்புண்டு இதன் மூலம் ஹோம் பட்டன் கொண்டு வெளியாகும் முதல் சாம்சங் கருவிகளாக இவைகள் திகழும்.

பிளாட் டிஸ்ப்ளே

பிளாட் டிஸ்ப்ளே

மேலும் அறிக்கையின் படி, கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் கருவிகளில் பிளாட் டிஸ்ப்ளே மற்றும் எட்ஜ் மாறுபாடு இருக்க முடியாது. மேலும், திரை அளவுகள் முறையே 5.7 அங்குலம் மற்றும் 6.2 அங்குலம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

ஒருவேளை இக்கருவிகளில் சியோமி மி மிக்ஸ் கருவிகளை போன்றே உளிச்சாயுமோரம் குறைவான (பிசெல்லெஸ்) வடிவமைப்பு செயல்படுத்தப்படலாம். கைரேகை சென்சார் ஆனது டிஸ்ப்ளேவிற்கு பின்னால் இருக்கும் என்ற முந்தைய அறிக்கைகளுக்கு முரண்பாடான தகவலை இந்த அறிக்கை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயலி, ரேம்

செயலி, ரேம்

இதர அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்8 கருவி நிறுவனத்தின் சொந்த ஏஐ (AI) மென்பொருள் பிக்ஸ்பை (Bixby) கொண்டு வெளிவரலாம். மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்டது ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டிருக்கும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது. மற்றும் சாம்சங் தலைமை கருவியான இதில் 6ஜிபி ரேம் இருக்கலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இவைகள் தான் இருப்பதிலேயே பெஸ்ட் 6ஜிபி ரேம் கருவிகள்.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 final specs out; S8 Plus to feature dual camera. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X