சாம்சங்: எல்லாமே வெடித்தால் என்ன செய்றது, பயனர் புலம்பல்!

ஒரு பிரச்சனை என்றால் பரவாயில்லை, ஆனால் எல்லாமே பிரச்சனை என்றால் என்ன செய்வதெனக் குழம்பித் தவிக்கின்றார் இந்தச் சாம்சங் பயனர்..

By Meganathan
|

சாம்சங் கேலக்ஸி நோட் 7 பஞ்சாயத்திற்குப் பின் இம்முறை இன்னும் ஓர் புதிய பஞ்சாயத்துச் சாம்சங் மீது கிளம்பியுள்ளது. நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து அவற்றை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது.

இம்முறை கேலக்ஸி எஸ்7 எட்ஜ் பயனர் ஒருவர் தனது கருவி சார்ஜிங் செய்யும் போது வெடித்துச் சிதறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கருவி நோட் 7 கருவிக்கு மாற்றாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விற்பனை

விற்பனை

கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியானது தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கருவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நோட் 7

நோட் 7

தான் வாங்கிய நோட் 7 கருவியை ஒப்படைத்து இரு வாரங்களில் சாம்சங் மூலம் வழங்கப்பட்ட கருவி தான் இந்தக் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் கருவியாகும், மேலும் இந்தக் கருவியினைச் சார்ஜ் செய்யத் தான், சாம்சங் வழங்கிய சார்ஜரையே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்ட பயனாளி தெரிவித்துள்ளார்.

ஓஹியோ

ஓஹியோ

முன்னதாக இதேப் போன்று ஓஹியோவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் ஒருவர் தனது எஸ்7 எட்ஜ் கருவி வெடித்துச் சிதறியதாகத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

காயம்

காயம்

கருவி வெடித்துச் சிதறியதால் பயன்படுத்தியவருக்குச் சில காயங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நோட் 7 கருவி வெடித்ததற்கு அமெரிக்காவில் மூன்று பேர் சட்ட ரீதியான நடவடிக்கையைக் கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மனு

மனு

இதே போல் தென் கொரியாவில் மட்டும் சுமார் 527 கேலக்ஸி நோட் 7 பயனர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைக் கோரி மனு அளித்துள்ளனர். இந்த வழக்குகளின் மூலம் சுமார் ரூ.29,420.60 வரை இழப்பீடு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S7 Edge explodes while charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X