இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 8 டம்மி மாடல்!

சாம்சங் கேலக்ஸி நோட் 8 டம்மி மாடலின் வீடியோ

By Siva
|

தென்கொரியாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், கடந்த ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 மாடல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் நிறுவனத்தின் புகழ் மற்றும் பணம் ஆகியவற்றுக்கு பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த மாடலாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல், மிகச்சிறந்த வல்லுனர்களால் பலமுறை சோதிக்கப்பட்டு உருவாகி வருகிறது.

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 8 டம்மி மாடல்!

இந்த வருட இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படும் இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் லீக் ஆகிவிட்டதாகவும், இவை ஒருசிலரின் கையில் இருப்பதாகவு8ம் இணையத்தில் ஒரு வதந்தி நிலவி வருகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் சீன நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் இருந்து சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல், இதற்கு முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மாடலை ஒட்டி இருப்பதாகவும், அதே நேரத்தில் அந்த மாடலைவிட புதிய மாடலின் ஃபேப்ளட் சற்று பெரியதாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலின் டம்மி ஸ்மார்ட்போன் என்றும், ஆனாலும் ஒரிஜினல் மாடல் இந்த டம்மியை ஒட்டியே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பின்பக்க டூயல் கேமிரா செட்டப்:

பின்பக்க டூயல் கேமிரா செட்டப்:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலின் டம்மி மாடல் குறித்து அந்த வீடியோவில் இருந்து தெரிய வருவது என்னவெனில் இந்த மாடலின் பின்புறம் டூயல் கேமிரா செட்டப் அமைந்துள்ளது.

இந்த இரண்டு கேமிராக்களும் செங்குத்தாகவும், அதே நேரத்தில் இரண்டு கேமிராவிலும் எல்.இ.டி பிளாஷ் வசதியும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த மாடலில் ஏற்கனவே முதல்முறையாக டூயல் கேமிரா வசதி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக பார்த்தோம்.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு வதந்தி கூறுவது என்னவென்றால் அந்த வீடியோவில் இருப்பது சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் இல்லை என்றும், அது சாம்சங் கேலக்ஸி C10 மாடல் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் எங்கே இருக்கின்றது தெரியுமா?

ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் எங்கே இருக்கின்றது தெரியுமா?

இந்த மாடலின் பின்பக்கத்தில் எந்த இடத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லை. இதிலிருந்து இந்த சென்சார் முன்பக்கம் உள்ள டிஸ்ப்ளேவில் தான் இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

இந்த மாடலில் பிங்கர் பிரிண்ட் முன்பக்க டிஸ்ப்ளேவில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பின்பக்கமாக பிங்கர் பிரிண்ட் வைக்கும் டிசைனுக்கு முடிவு கட்டப்பட்டது என்றே வைத்து கொள்ளலாம்

ஜூன் மாதத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் - ஏன்.?ஜூன் மாதத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் - ஏன்.?

மேலும் சில வதந்திகள்:

மேலும் சில வதந்திகள்:

இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து மேலும் சில வதந்திகளிடம் தெரிந்து கொள்வது என்னவெனில், இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835/எக்ஸினோஸ் 8895 பிராஸசர் மற்றும் 3700mAh பேட்டரி ஆகிய அம்சங்களுடன் உள்ளது.

இந்த மாடல் வரும் செப்டம்பரில் பெர்லின் நகரில் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் IFA கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
A new video featuring the dummy Samsung Galaxy Note 8 has surfaced online.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X