வெடித்தாலும் பயன்படுத்துவோம், சாம்சங் துணை நிற்கும் 10 லட்சம் பயனர்கள்!

வெடித்தாலும் சாம்சங் கேலக்ஸி நோட் 7 பயன்படுத்துவோம், வெறி கொண்ட சாம்சங் பயனர்கள் எண்ணிக்கை இத்தனையா, சாம்சங் அதிர்ச்சி..

Written By:

சாம்சங் நிறுவனம் தனது நோட் 7 கருவிகளை திரும்பப் பெற்ற விவகாரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் தான் தயாரித்த கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவற்றை மிக வேகமாக திரும்பப் பெற்றது..

வெடித்தாலும் பயன்படுத்துவோம், சாம்சங் துணை நிற்கும் 10 லட்சம் பயனர்கள்

கருவிகளை பணம் கொடுத்து வாங்கியோருக்கு சாம்சங் சார்பில் முழு பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்கள் சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின் படி சுமார் 10 லட்சம் பேர் இன்னமும் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகளைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் சில நாட்களில் இணையதளங்களிலும் மீம்ஸ் வகையில் உலவிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெடித்தாலும் பயன்படுத்துவோம், சாம்சங் துணை நிற்கும் 10 லட்சம் பயனர்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 குறித்த நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியிடப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து பெரும்பாலான பயனர்கள் தங்களது கேலக்ஸி நோட் 7 கருவிகளைத் திரும்ப வழங்கக்கூடாது என முடிவு செய்துள்ளனர். முக்கியமாகக் கருவிகளின் அம்சங்கள் அல்லது மாற்றுக் கருவியை வாங்கும் வழிமுறைகளைப் பின்பற்ற இயலாது போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என தென்கொரிய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களது பாதுகாப்பு குறித்தும் எவ்வித கவலையும் இன்றி இந்தக் கருவிகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவது வியப்பளிக்கும் விடயமாக இருக்கின்றது. சில பயனர்கள் நோட் 7 கருவியை வழங்காமல் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் கருவிக்காகக் காத்திருக்கின்றனர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெடித்தாலும் பயன்படுத்துவோம், சாம்சங் துணை நிற்கும் 10 லட்சம் பயனர்கள்

இந்தக் கருவிகளுக்கான எக்ஸ்சேன்ஜ் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுவது. மற்றொன்று பல்வேறு விமான நிறுவனங்களும் நோட் 7 கருவிகளை விமானத்தில் அனுமதிப்பதில்லை. சில நாடுகளில் கேலக்ஸி நோட் 7 வைத்து விமானத்தில் பிடிபடும் நமர் மீது அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கேலக்ஸி நோட் 7 கருவிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுவிட்டதால் இவற்றுக்கான சர்வீஸ் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy Note 7 Still Being Used by Over a Million People
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்