பார்த்தால் மட்டும் போதும், அடுத்த கருவியில் சாம்சங் அதிரடி.!?

By Meganathan
|

சாம்சங் கேலக்ஸி நோட் கருவிகளின் அடுத்த மாடலில் அதிரடி காட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் படி சாம்சங் கேலக்ஸி நோட் புதிய மாடலில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தற்சமயம் அனைத்து ஸ்மார்ட்போன் கருவிகளிலும் பரவலாக இருக்கும் கைரேகை ஸ்கேனர் அம்சத்தை மிஞ்சும் அளவு இருக்கும்.

01

01

வெளியாகி இருக்கும் ஆன்லைன் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கருவியினை ஆகஸ்டு மாதம் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

02

02

சாம்சங் நிறுவனம் இந்த கருவியினை கேலக்ஸி நோட் 7 என பெயரிடலாம் என கூறப்படுகின்றது. இதன் மூலம் இந்நிறுவனம் நோட் வகை கருவியிகளை கேலக்ஸி எஸ் சீரிசில் இணைக்க திட்டமிடுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

03

03

ஐரிஸ் ஸ்கேனர் கொண்டிருப்பதால் கேலக்ஸி நோட் 7 கருவியினை கண்களால் பார்த்தே அன்லாக் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

04

04

இது குறித்து சாம்சங் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் அந்நிறுவனம் தடந்த மாதம் வெளியிட்ட கேலக்ஸி டேப் ஐரிஸ் கருவியில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

05

05

புதிய கேலக்ஸி நோட் கருவியில் 6 ஜிபி ரேம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் புதிய 1010nm LPDDR4 6ஜிபி ரேம் மாட்யூல் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

06

06

இதோடு புதிய கேலக்ஸி நோட் கருவியானது 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

07

07

மற்ற தகவல்களை பொருத்த வரை 5.8 இன்ச் QHD திரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

08

08

கேமராவை பொருத்த வரை 12 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-பிக்சல் செட்அப் மற்றும் வாட்டர் ப்ரூஃப் அம்சமும் வழங்கப்படலாம்.

09

09

சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஆக்டிவ் கருவியில் ஐபி68 சான்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கருவியை சுமார் 5 அடி ஆழம் வரை நீரில் சுமார் 30 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

10

10

வெளியாக இருக்கும் புதிய கருவியின் விலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகிவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 6 to come with Iris scanner? Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X