சாம்சங் கேலக்ஸி புக் அதிகாரபூர்வமான வீடியோ வெளியீடு

சாம்சங் கேலக்ஸி புக் எப்போது ரிலீஸ் ஆகப்போவுது தெரியுமா?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த MWC தொழில்நுட்ப கருத்தரங்கில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் மற்றும் கேலக்ஸி S3 ஆகியவை விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவதது. ஆனால் கேலக்ஸி S3 ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் கேலக்ஸி புக் மட்டும் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்தது

சாம்சங் கேலக்ஸி புக் அதிகாரபூர்வமான வீடியோ வெளியீடு

இந்நிலையில் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வ வீடியோவில் கேலக்ஸி புக் செய்யப்பட்ட விதம், அதன் எஞ்சினியரிங் வடிவம், டெவலப் செய்யப்பட்ட விதம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவின்படி சாம்சங் கேலக்ஸி புக் அலுமினியம் மற்றும் இன்னும் ஒருசில உலோகங்களில் ஆனது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த வீடியோவில் இந்த கேலக்ஸி புக் செய்யப்பட்ட விதம் மட்டுமின்றி இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நடமாடும் கம்ப்யூட்டர் என்ற அளவில் நமக்கு பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வார ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவுகள் என்னன்னு தெரியுமா?

அதே நேரத்தில் இந்த அற்புதமான, நம்முடைய வாழ்க்கைக்கு ஒவ்வொரு வினாடியும் தேவைப்படும் இந்த கேலக்ஸி புக் மிக விரைவில் வெளியாகும் என்ற குறிப்பும் இந்த வீடியோவில் உள்ளது.

இந்த கேலக்ஸி புக் டெக்னாலஜி குறித்து பார்த்தோம் என்றால் இண்டல் விண்டோஸ் 10 டேப்ளட் ஆக இரண்டு வெர்ஷனில் அதாவது 10.6 மற்றும் 12 இன்ச்களில் வெளியாக உள்ளது.

இந்த 10.6 மற்றும் 12 இன்ச் ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் வைஃபை மற்றும் வைஃபை +LTE வசதியும் உண்டு. மேலும் இதனுடன் கீபோர்டு கவர் மற்றும் எஸ் பென் ஆகியவையும் இலவசமாக கிடைக்கும்

மேலும் சாம்சங் கேலக்ஸி புக் குறித்த பிற தகவல்கள் அதாவது இதன் விலை உள்பட மற்ற தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று சாம்சங்க் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின்படி இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக 12 இன்ச் மாடல் கூடுதல் விலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Samsung releases Galaxy Book official launch film.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்