இணையத்தில் கசிந்த சாம்சங் ரகசியங்கள்..!!

Written By:

தயாரிப்பு பணிகளில் இருக்கும் எவ்வித விஷயமும் ரகசியமாக கசிவது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு விதத்தில் பிரச்சனையாக இருந்தாலும் மறுபறம் மறைமுக விளம்பரமாகவும் அமைகின்றது என்பதே உண்மை..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வரவேற்பு

திரைப்படங்கள் ஆனாலும், தொழில்நுட்ப கருவிகள் என்றாலும் திருட்டுத்தனமாக கசிந்த தகவல்களுக்கு மக்கள் மத்தியில் என்றும் வரவேற்பு இருக்க தான் செய்கின்றது.

ரகசியம்

இந்நிலையில் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தயாரித்து கொண்டிருக்கும் புதிய கருவி குறித்த ரசசியங்கள் மறைமுகமாக இணையத்தில் கசிந்திருக்கின்றது.

கேலக்ஸி

அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ3 மற்றும் ஏ5 கருவிகளின் அடுத்த மாடலாக கருதப்படும் இரு சாம்சங் கருவிகளின் புகைப்படங்கள் இணையத்தை உலா வருகின்றன.

ஸ்லீக்நௌ

குறிப்பிட்ட சாம்சங் கருவிகளின் தகவல்கள் ஸ்லீக்நௌ எனும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ3 (2016) கருவியில் 4.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் குவாட்கோர் பிராசஸர், 1.5 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

கேலக்ஸி ஏ7 (2016)

இதே போல் கேலக்ஸி ஏ7 (2016) கருவியில் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளமும் 5.2 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 12 எம்பி ப்ரைமரி கேமரா, 4.7 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்.

கேலக்ஸி ஏ5

சாம்சங் கேலக்ஸி ஏ5 (எஸ்எம்-ஏ510எஃப்) கருவியை பொருத்த வரை ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1, 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 4.7 இன்ச் முன்பக்க கேமராவும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Samsung Galaxy A3, Galaxy A5 Successors Leaked online. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்