ஸ்டைலான சாம்சங் கேலக்ஸி ஏ3 (2017) - ஆன்லைன் லீக் தகவல்கள்.!

2017-ல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ3 ஆன்லைனில் கிசைந்துள்ளது, அதுபற்றிய விவரங்கள்.

Written By:

சாம்சங் நிறுவனத்தின் ஏ தொடர் ஸ்மார்ட்போன்கள் தான் சமீப கால லீக்ஸ் இண்டர்நெட்டின் சூடான தகவல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் அடிக்கடி சாம்சங் ஏ வரிசை கருவிகள் பற்றிய லீக் தகவல்கள் இணையத்தில் சுற்றுவந்த வண்ணம் தான் உள்ளன.

அப்படியாக சமீபத்தில் மிட்-ரேன்ஞ் கேலக்ஸி ஏ7 (2017) மற்றும் மிட்-ரேன்ஞ் கேலக்ஸி ஏ5 (2017) ஆகிய கருவிகளினுந் லீக் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து இப்போது, கேலக்ஸி ஏ3 (2017) கருவி சார்ந்த வீடியோ லீக் சிக்கியுள்ளது.

இதற்கு முன்பு வந்த ஏ தொடர் கருவிகளை போலவே இந்த கருவியும் வடிவமைப்பில் சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு தலைமை கருவியான கேலக்ஸி எஸ்7 போன்றே தான் உள்ளது. அந்த காரணத்தினால் நாம் மகிழ்ச்சை கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இந்த கருவியின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதேயாகும்.

அப்படியாக இருக்கருவி பற்றி வெளியான தகவல்கள் இதோ. மேலும் பல தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைத்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

லீக் புகைப்படத்தில்

முன் குறிப்பிட்டுள்ளது போல், இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ஆனது கேலக்ஸி எஸ்7 கருவியை போன்று இருக்கும். உடன் வெளியான தகவலின்படி லீக் புகைப்படத்தில் பவர் பட்டன் உடன் ஒரு 2.5டி வளைந்த கிளாஸ் உள்ளது மற்றும் ஸ்பீக்கர் வலது பக்கத்திலும், வால்யூம் கட்டுப்பாடுகள் இடது பக்கத்திலும் இடம் பெறுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கைரேகை ஸ்கேனர்

டிஸ்ப்ளேவின் கீழ் செவ்வக ஹோம் பட்டன் ஆனது அமைத்துள்ளது மற்றும் அதே பொத்தான் ஒரு கைரேகை ஸ்கேனர் ஆக பணிபுரிகிறது. கீழே, ஒரு யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் அதிர்ஷ்டவசமாக 3.5 எம்எம் ஆடியோ போர்ட் உள்ளது.

எச்டி தீர்மானம்

2017-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஏ3 கருவியானது எச்டி தீர்மானம் கொண்ட அதே (கேலக்ஸி ஏ3, 2016 மாடல்) 4.7 அங்குல சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே வைத்திருக்கிறது.

கேமிரா

எக்ஸிநோஸ் 7870 சிப்செட், 2ஜிபி ரேம், 12எம்பி முதன்மை கேமிரா, 8எம்பி செல்பீ கேமிரா ஆகிய அம்சங்களின் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன ஆனால் பேட்டரி திறன் சார்ந்த தகவல்கள் எதுவும் இல்லை. மென்பொருள் பக்கத்தில், ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு-வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.உடன் சாம்சங் கேலக்ஸி ஏ3, (2017) எப்போது ஒரு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மேம்படுத்தல் நிகழ்த்தும் என்ற விவரம் அறியப்படவில்லை. ஆனால் 2017-இல் அது நடக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விற்பனை

சாம்சங் கேலக்ஸி ஏ3 (2016) கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டு இன்றும் விற்பனையில் உள்ளது. கேலக்ஸி ஏ3 (2017) கருவியும் ஜனவரி 2017-ல் வெளியாகும் என்று கருதப்படுகிறது. இப்போது வரையிலாக இக்கருவி எங்கு கிடைக்கும் என்ற விவரங்கள் இல்லை, அது சார்ந்த செய்தி விரைவில் ஆன்லைனில் வெளியாகும் என்று நம்பலாம்.

மேலும் படிக்க

விரைவில் : ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 5 நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Samsung Galaxy A3 (2017) Video Renders Surfaced Online and It Looks Absolutely Gorgeous. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்