அனைவரையும் 'அதிர' வைக்கும் ரஷ்ய தொழில்நுட்பங்கள்..!!

By Meganathan
|

ரஷ்யா, பெயரை கேட்டாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அமெரிக்காவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தான். ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான பிரச்சனை உலகம் அறிந்த ஒன்றே.

உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

அமெரிக்காவுடன் 'பஞ்சாயத்து' இருந்தாலும் அமெரிக்காவை தவிர்த்து ரஷ்யா கவனம் தற்சமயம் தீவிரவாத இயக்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

'கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

அதன்படி உலகையே சில மாதங்களாக அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை ரஷ்யா ஒடுக்கி வரும் நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை 'வதம்' செய்ய ரஷ்யா பயன்படுத்தும் தொழில்நுட்ப ஆயுதங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சு-25

சு-25

சு-25 ட்வின் என்ஜின் கொண்ட ஜெட் விமானம் 1978 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. சோவியத் யூனியன் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் அதிக எடை கொண்ட ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறன் கொண்டவை.

சு-25

சு-25

ரஷ்யாவின் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதோடு தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்குவதோடு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அனைத்து விதமான வெப்பநிலைகளிலும் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெட்ஸ்நஸ்

ஸ்பெட்ஸ்நஸ்

ரஷ்யாவின் விசேஷ ராணுவ படை ஸ்பெட்ஸ்நஸ் என அழைக்கப்படுகின்றது. முறையான பயிற்சி பெற்றிருக்கும் இந்த வீரர்கள் ராணுவ உளவுத்துறையின் கீழ் இயங்குகின்றனர்.

ஸ்பெட்ஸ்நஸ்

ஸ்பெட்ஸ்நஸ்

இப்படையினர் மொத்தமாக 31 அதி நவீன துப்பாக்கிகளை கையாளுகின்றனர். இதோடு சத்தமில்லாமல் வெடிக்கும் கிரேனுடுகளும் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

எம்ஐ-24

எம்ஐ-24

ரஷ்யா நாட்டு ராணுவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 208 முதல் 280 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பயணிக்க முடியும்.

எம்ஐ-24

எம்ஐ-24

இரு என்ஜின்களை கொண்ட இந்த தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்கள் குறிப்பாக வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது.

பிடிஆர்-80

பிடிஆர்-80

ரஷ்யா நாட்டின் சொந்த தயாரிப்பான இந்த 8 சக்கரம் கொண்ட டேன்கர் தொடர்ச்சியாக 24 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டிருக்கின்றது.

பிடிஆர்-80

பிடிஆர்-80

மேலும் இந்த டேன்கரில் இயந்திர துப்பாக்கி மற்றும் கிரினேடு லான்ச்சர்களும் கொண்டிருக்கின்றது.

யுஏவி

யுஏவி

ஆளில்லாமல் ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்களை யுஏவி என அழைக்கின்றனர். இவை பெரும்பாலும் பேராபத்துகளை விளைவிக்க பயன்படுத்தப்படுகின்றன.

யுஏவி

யுஏவி

யுஏவி விமானங்கள் உளவு பணிகளுக்கு பயன்படுத்த சிறந்தவைகளாக இருக்கின்றன. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டவை.

Best Mobiles in India

Read more about:
English summary
Russian Weapons of War ISIS Should Fear. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X