ரஷ்யாவால் மட்டுமே இப்படியெல்லாம் 'பிளான்' பண்ண முடியும்..!

Written By:

யார் வல்லரசு..? யார் சக்தி வாய்ந்தவர்..?? யார் பெரியவர் - என்ற நீயா நானா போட்டி, பூமி கிரகத்தின் எல்லையைத் தாண்டியும் நடக்கிறது என்பது தான் நிதர்சனம், அதைதான் - ஸ்பேஸ் வார் (Space war) என்கிறார்கள்.

ஸ்பேஸ் வார் என்றதும், உடனே விண்வெளியில் நடக்கும் யுத்தம் என்று கற்பனைக்குதிரையை பறக்க விட வேண்டாம். ஸ்பேஸ் வார் என்பது விண்வெளி ஆராய்ச்சிகளில் உலக நாடுகளுக்குள் நடக்கும் முன்னிலை சார்ந்த போட்டியாகும். எடுத்துக்காட்டுக்கு, யார் முதலில் நிலவில் காலடி பதிக்கிறார்கள் என்று சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்த டோட்டியை சொல்லலாம்.

அந்த போட்டியில் அமெரிக்க வெற்றி பெற்றதில் இருந்து, இன்று வரையிலாக ரஷ்யாவின் முக்கால்வாசி விண்வெளி ஆராய்சிகள் அமெரிக்காவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தான் உருவாகின்றன. அப்படியாக சமீபத்தில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு திகிலூட்டும் மற்றும் மிகவும் விபரீதமான 'நுக் என்ஜின்' உருவாக்கம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

18 மாதங்கள் :

தற்போதைக்கு நம்மிடம் உள்ள அதிநவீன என்ஜின்களை கொண்டு, பூமி கிரகத்தில் இருந்து செவ்வாய்க்கு செல்ல 18 மாதங்கள் ஆகும் அதுவும் 'ஓன் வே ட்ரிப்' அதாவது செல்வதற்கு மட்டும்.

மரணிக்க வேண்டியது தான் :

அந்த இடைப்பட்ட பயண காலத்தில் அலுப்பு, கதிர்வீச்சு நச்சு, புற்றுநோய் உட்பட என நாம் மரணிக்க ஏகப்பட்ட காரணங்களை சந்திக்க நேரிடலாம். மீறி செவ்வாய் கிரகத்தை அடைந்தால் அங்கேயே மரணிக்க வேண்டியது தான்.

தளவாடங்கள் :

ஏனெனில், செவ்வாய் கிரகத்தில் இருந்து திரும்பி பூமிக்கு வரும்படியான எரிபொருள் அறுவடை போன்ற தளவாடங்கள் (wishful logistics like fuel harvesting) இன்றுவரை சாத்தியப்படவில்லை.

ரோசடோம் திட்டம் :

நிலைமை இப்படியிருக்க, ரஷ்யாவின் தேசிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் (Rosatom) கடந்த வாரம் வெளியிட்ட திட்டம் ஒன்று எதிரி நாடான அமேரிக்கா உட்பட பிற அனைத்து உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களையும் அதிர்ச்சியில் திணற வைத்துள்ளது.

வெறும் 45 நாட்களில் :

அதாவது தற்போது பயன்படுத்தும் என்ஜின்களை தவிர்த்து, நுக்லியர் என்ஜின்தனை (Nuclear Engine) உருவாக்கி வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைய முடியும் அதுவும் பூமி கிரகத்திற்கு திரும்பும்படியான எரிபொருள் வசதியுடன்..!

பெரிய சவால் :

நுக்லியர் என்ஜின்தனை உருவாக்கும் முனைப்போடு ரஷ்யா இருந்தாலும் 2025-ஆம் ஆண்டிற்குள் இதை நிகழ்த்த சாத்தியமில்லை ஏனெனில் ரஷ்யாவில் அதன் நிதி நிலைமை பெரிய சவாலாக இருக்கிறது.

அணுப்பிளவு :

1967-ஆம் ஆண்டிலேயே சோவியத் விஞ்ஞானிகள், அணுப்பிளவு மூலம் இயங்கும் செயற்கைக்கோள்களில் (fission-powered satellites) இருக்கும் பலவகையான சிக்கல்களுக்கு தீர்வுகளை கண்டறிந்து விட்டன.

1965 :

சோவியத் ஒன்றியத்திற்கு முன்பே அதாவது 1965-ஆம் ஆண்டிலேயே (பனிப்போர் காலம்) அமெரிக்கா தனது அணு வெப்ப உந்துவிசை திட்டமான ஸ்நாப் 10ஏ (SNAP-10A) தனை அறிமுகம் செய்திருந்தது என்பதும் குறிபிடத்தக்கது.

சக்தி :

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் அணு வெப்ப உந்துவிசை திட்டங்களும் இலகுரக சுற்றுப்பாதை அளவிலான செயற்கைக்கோள்களுக்கு உதவுமே தவிர உயர் உந்து சக்தியோ அல்லது கிரகங்கள் தாண்டி பயணிக்கும் சக்தியோ கொண்டவைகள் அல்ல.

2018 :

ஆனால் தற்போது சுமார் 15 பில்லியன் ருபல்ஸ், 2018 ஆம் ஆண்டு வாக்கில் நிலம் சார்ந்த சோதனை உலை என தேசிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் மிகவும் மும்மரமாக இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது.

நுக்லியர் என்ஜீன் :

வழக்கமான உந்துவிசை என்ஜின்களான கெமிக்கல் ப்ரொபல்ஷன் (Chemical Propulsion) முறைக்கும், நுக்லியர் என்ஜீன் முறைக்கும் வேகத்தையும் விபரீதத்தையும் தவிர பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைமுக அரசியல் :

இந்த நுக்லியர் என்ஜின் உருவாக்கத்தில் ஒரு மறைமுகமான அரசியலும் இருக்கிறது. அதாவது ரஷ்யா இந்த நுக்லியர் என்ஜின் உருவாக்கத்தில் வெற்றி பெற்று விட்டால் சர்வதேச ஒப்பந்தங்களில் அணு ஆயுதங்களை மட்டுமே விண்ணபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பாதுகாப்பானது இல்லை :

உருவாக்கம் பெறும் நுக்லியர் என்ஜின் ஆனது மிகவும் பாதுகாப்பானது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏவப்பட்ட எல்லா ராக்கெட்களும் விண்ணுக்குள் தான் செல்லும் என்ற உத்திரவாதம் இல்லை, பூமியிலும் விழுந்து நொறுங்கலாம்.

விழுந்து நொறுங்கியது :

1978-ஆம் ஆண்டில், அணு சக்தியில் இயங்கும் சோவியத் செயற்கைக்கோள் ஒன்று சுமார் 50,000 சதுர மைல்களுக்கு கதிரியக்கக் கழிவுகளை வெளியிட்டுக் கொண்டே வடக்கு கனடாவில் விழுந்து நொறுங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய பழமொழி :

ஆனாலும் கூட - "முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது" என்ற ரஷ்ய பழமொழிக்கு ஏற்றப்படியாக தான் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகள் நடப் பெற்றுக்கொண்டிருகின்றன.

மேலும் படிக்க :

உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!


புதின் ஒன்றும் முட்டாள் இல்லை, 'கைவசம்' நிறையா இருக்கு..!!


அமெரிக்க அதிபரை 'எப்போதும்' பின்தொடரும் அந்த கருப்பு சூட்கேஸுக்குள்..?!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Russia Thinks It Can Use Nukes to Fly to Mars in 45 Days. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்