ரஷ்யாவின் ஆயுத பலம், 'கதி கலங்கும்' அமெரிக்கா..!

|

சூப்பர் பவர் நாடுகள் என்றாலும் சரி, போர் விரும்பி நாடுகள் என்றாலும் சரி, நம் நினைவிற்கு முதலில் வரும் இரண்டு நாடுகள் - ரஷ்யாவும், அமெரிக்காவும் தான். அப்படியான இரண்டு நாடுகளுக்கும் இடையே நடக்கும் வளர்ச்சியுத்தமானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த இரண்டு நாடுகளுக்கும் ஏனைய உலக நாடுகள் சந்திக்கும் பசி, பட்டினி, பஞ்சம் என்ற வளர்ச்சி போராட்டம் ஏதுவுமில்லை அவர்களின் ஒரே போராட்டம் ஒட்டுமொத்த உலகையும் ஆளும் வல்லமை பெற வேண்டும் என்பதை நோக்கியே தான் இருக்கிறது என்பது நிதர்சனம்.

அழிவு சக்தி :

அழிவு சக்தி :

ஒரு நாட்டின் அழிவு சக்தியே, அதாவது ஒரு நாட்டின் ஆயுத பலமே அந்த நாட்டின் வளர்ச்சி என்ற நிலையை கொண்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சாட்சி :

சாட்சி :

ஒரு நாடு - வறுமை, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்காக செய்யும் செலவை விட ராணுவம், பாதுகாப்பு ஆகியவைகளுக்கு செய்யும் செலவு பல மடங்கு அதிகமாக இருப்பதே அதற்கு சாட்சியாகும்.

பட்ஜெட் :

பட்ஜெட் :

ஏற்கனவே வளர்ந்த நிலையை அடைந்து விட்ட அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்பு சார்ந்த விடயங்களுக்கு அதாவது ராணுவத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் பட்ஜெட் ஆனது ஒரு சராசரி நாட்டின் கற்பனைக்கு எட்டாத தொகையாக இருக்கும் என்பது தான் உண்மை.

முன்னிலை :

முன்னிலை :

அப்படியாக, அமெரிக்காவுடன் ராணுவ தொழில்நுட்பங்களோடு ஒப்பிடும் போது ரஷ்யா மிகவும் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது என்ற மிரட்டலான தகவலை வெளியிட்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பகுத்தாய்வாளர் ஒருவர்.

முன்னாள் உளவியல் போர் அதிகாரி :

முன்னாள் உளவியல் போர் அதிகாரி :

அமெரிக்க ரானுவத்தின் முன்னாள் உளவியல் போர் அதிகாரியான ஸ்காட் பென்னட் (Scott Bennett), ப்ரெஸ் டிவி பேட்டி ஒன்றில் இதை விளக்கியுள்ளார்.

பரிசோதனைகள் :

பரிசோதனைகள் :

அந்த பேட்டியில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் பரிசோதனைகள் எல்லாம் மக்களை குழப்ப செய்யப்பட்டவைகள் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ராணுவ தொழில்நுட்பம் :

ரஷ்யாவின் ராணுவ தொழில்நுட்பம் :

உண்மை என்னவென்றால், அமெரிக்காவை விட ரஷ்யாவின் ராணுவ தொழில்நுட்பம் தான் உச்சத்தை அடைந்துள்ளது என்று ஸ்காட் பென்னட் கூறியுள்ளார்.

ஏவுகணை தொழில்நுட்பம் :

ஏவுகணை தொழில்நுட்பம் :

முக்கியமாக ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பமானது எந்த விதமான போரையும் எளிதில் முடித்துவிடக் கூடியது என்று கூறியுள்ளார்.

உச்சம் :

உச்சம் :

அதாவது ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பமானது அனைத்து வகையான ஏவுகணை தொழில்நுட்பத்தின் உச்சம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது ரஷ்யா :

சிரியா மீது ரஷ்யா :

இதுவரை எந்த போரிலும் காணப்படாத அதிநவீன போர் விமானங்களை சிரியா மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் காணப்பட்டுள்ளத்தை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

900 மைல்கள் :

900 மைல்கள் :

அவ்வகை போர் விமானங்களில் இருக்கும் ஏவுகணைகள் சுமார் 900 மைல்கள் வரை பயணித்து தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி :

சக்தி :

அதாவது, அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரஷ்யா மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்காவின் கென்னன் இன்ஸ்டியூட்டை சேர்ந்த மைக்கில் கொஃப்மான் (Michael Kofman) கூறியுள்ளார்.

திறன் :

திறன் :

மேலும் அவர், 900 மைல்கள் பயணித்து தாக்கும் ஏவுகணையானது உண்மையிலேயே மிகவும் திறன் வாய்ந்த ஒரு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதம் தான் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

அம்பலம் :

அம்பலம் :

உலகம் கற்பனை செய்வதை விட மிகவும் அதீத ராணுவ தொழில்நுட்ப சக்தியை ரஷ்யா கொண்டுள்ளது என்பது, சிரியா மீதான தாக்குதல் மூலம் அம்பலமாகி உள்ளது.

யுத்த தந்திரம் :

யுத்த தந்திரம் :

மேலும் அதிநவீனம் என்பது ரஷ்யாவின் ஆயுதங்களில் மட்டுமில்லை ரஷ்யாவின் யுத்த தந்திரத்திலும் கூட இருக்கிறது என்பது உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது.

அமெரிக்க விமானப்படை தளபதி :

அமெரிக்க விமானப்படை தளபதி :

மிகவும் தூரத்தில் இருந்து, மிகவும் வேகமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் ராணுவதொழில்நுட்பம் என்னை மிகவும் ஈர்க்கிறது என்று ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளபதியான பென் ஹோட்ஜ்ஸ் (Lt. Gen. Ben Hodges) கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விளாதிமிர் புதின் :

விளாதிமிர் புதின் :

இதில் இருந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வெற்றிகரமாக தனது ராணுவத்தை நவீனப்படுத்தி வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்க பரிசோதனை :

அமெரிக்க பரிசோதனை :

அவ்வப்போது அமெரிக்காவும் தனது அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை பரிசோதனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

230 மில்லியன் டாலர் :

230 மில்லியன் டாலர் :

அப்படியாக சமீபத்தில், 230 மில்லியன் டாலர் செலவில் அதிநவீன ஆயுத பரிசோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

வெற்றி :

வெற்றி :

அந்த பரிசோதனையில் மார்ட்டின்ஸ் டெர்மினல் ஹை ஆல்ட்டியூட் ஏரியா டிபென்ஸ் (Martin's Terminal High Altitude Area Defense) சிஸ்டம்ஸ் மற்றும் ஏஜிஸ் பல்லிஸ்டிக் மிசைல் டிபென்ஸ் (Aegis Ballistic Missile Defense) ஆகியவைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ராணுவ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை மிஞ்சும் ரஷ்யா. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X