ரூபாய் நோட்டுத் தடை, வாரி வழங்கும் வோடபோன்.!

இந்தியாவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி வோடபோன் நிறுவனம் தனது பயனர்களுக்குப் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

Written By:

இந்தியாவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையை டெக் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பல்வேறு ஆன்லைன் வர்த்தகத் தளங்களும் கேஷ் ஆன் டெலிவரி முறையை ஏற்பதை நிறுத்திக் கொண்டன. கிடைக்கும் எல்லா வழிமுறைகளையும் டிஜிட்டல் பண மாற்று முறையை ஊக்குவித்து வருகின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிவிப்பு

பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பயனர்களுக்குக் கிரெடிட் முறையில் டாக்டைம் மற்றும் டேட்டா பயன்பாடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிரீபெயிட்

வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 டாக்டைம் மற்றும் 30 எம்பி அளவிலான டேட்டா கிரெடிட்டாக வழங்கப்படும் என்றும் இதற்கு 24 மணி நேர வேலிடிட்டி என அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போஸ்ட்பெயிட்

வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்கள் தங்களது கட்டணத்தைச் செலுத்தும் கால அவகாசத்தை மூன்று நாட்களுக்கு நீட்டித்து இருக்கின்றது.

பிரச்சனை

மத்திய அரசின் திடீர் அறிவிப்பு மூலம் பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏடிஎம் மையங்களும் இயங்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. வங்கிகளிலும் கூட்ட நெரிசல் இருந்து வருகின்றது.

சேவை

வோடபோன் சிறப்புச் சலுகையினைப் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்துப் பெற முடியும், அல்லது USSD கோடு மூலமாகவும் பெறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Rs 500, Rs 1000 notes banned, Vodafone offers credit to prepaid users
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்