ரூபாய் நோட்டுத் தடை மொபைல் வாங்குவோருக்கு நல்லது தான்.!!

இந்தியாவில் கடந்த வாரம் வெளியான ரூபாய் நோட்டுத் தடை அறிவிப்புக் காரணமாக நாடே சில்லறைக்காகத் திண்டாடி வருகின்றது. இருந்தாலும் மொபைல் போன் வாங்குவோருக்கு ஓர் நன்மை கிடைக்கிறது.

By Meganathan
|

இந்தியாவில் ரூ. 500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் தடை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் சரியான சில்லறை கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பு, புதிய மொபைல் போன் வாங்குவோருக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அதெப்படி என்பதைப் பார்ப்போமா.??

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

தினசரி பயன்பாடுகளுக்குத் தேவையான பணத்தை மிச்சம் செய்வதால் விலை உயர்ந்த மற்ற பொருட்களின் விற்பனை கடந்த சில நாட்களில் மந்தமாகி விட்டது.

விற்பனையாளர்கள்

விற்பனையாளர்கள்

இதன் காரணமாக மொபைல் போன் விற்பனையாளர்கள் தங்களது கருவிகளுக்கு இதுவரை இல்லாத சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தவணை முறை

தவணை முறை

அதன் படி மொபைல் போன் வாங்குவோர் எந்த வித முன்பணமும் செலுத்தாமல் புதிய மொபைல் போன்களை வாங்கிச் செல்ல முடியும். முழுப் பணத்தையும் 12 மாத எளியத் தவணை முறையில் செலுத்திக் கொள்ள முடியும். இத்தகவலை சங்கீதா மொபைல்ஸ் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

முடக்கம்

முடக்கம்

இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாகப் பெரும்பாலானோரும் விலை உயர்ந்த கருவிகளை வாங்குவதைத் தற்சமயம் நிறுத்தி விட்டனர். இதே நிலை சில வாரங்களில் இருந்து மாதம் அல்லது அதற்கும் மேலான காலம் வரை தொடரும் எனச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சலுகை

சலுகை

இந்தக் காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விற்பனையாளர்களும். குறிப்பாக மின்சாதன கருவிகளை விற்பனை செய்வோர் வாடிக்கையாளர்களைக் கவரும் எளியத் தவணை முறை போன்ற சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Rs 500 & Rs 1000 ban 'Good news' for phone buyers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X