ரூ.500 நோட்டுகள் நிறுத்தம், பணமின்றி சமாளிக்க உதவும் ஆப்ஸ்.!

பழைய நோட்டுகளுக்குப் புதிய நோட்டுகளைத் தேடி அலையும் மக்களைக் காப்பாற்ற இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

By Meganathan
|

மத்திய அரசின் புதிய அறிவிப்பு பெரும்பாலான இந்தியர்களைத் தூக்கமின்றியும், பணமில்லாத நாட்களைக் கடக்கச் செய்திருக்கின்றது. கையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வைத்திருப்போர் அவற்றைக் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற போராடி வருகின்றனர்.

ஏற்கனவை புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன் மக்கள் அருகாமையில் இருக்கும் ஏடிஎம் மையங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இரண்டு நாட்களுக்கு ஏடிஎம் மையங்களும் இயங்காது என்ற நிலையில் வரும் சில நாட்களுக்குப் புதிய நோட்டுக்களைப் பெறுவது சிக்கல் நிறைந்ததாகி விட்டது.

வங்கி கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற உதவும் பயனுள்ள ஆப்ஸ்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

ஓலா

ஓலா

கையில் பணம் இல்லையென்றாலும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருக்கும் பணத்தைக் கொண்டு ஓலா, யுபெர் போன்ற கால் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

மளிகை

மளிகை

வீட்டிற்கு அவசரமாக மளிகை மற்றும் காய்கறிகள் தேவையெனில் பிக் பாஸ்கெட், க்ரோஃபர்ஸ் போன்ற செயலிகளை டவுன்லோடு செய்து சில மணி நேரங்களில் பொருட்களை வீட்டில் உட்கார்ந்த படி பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேடிஎம்

பேடிஎம்

மொபைல் போன் ரீசார்ஜ், கட்டணங்களைச் செலுத்த பேடிஎம் சேவையைப் பயன்படுத்தலாம். இத்துடன் பல்வேறு இதர சேவைகளையும் டிஜிட்டல் பணம் மூலம் பெற முடியும்.

உணவு

உணவு

அல்ட்ராகேஷ் செயலியை டவுன்லோடு செய்து உங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து உணவுகளுக்குப் பணம் செலுத்த முடியும். இத்துடன் ஸ்விக்கி, ஃபுட் பாண்டா போன்ற ஆப்களும் உணவுகளை வாங்க உதவுகின்றன.

டிக்கெட்

டிக்கெட்

திரைப்படங்களுக்குச் செல்ல புக்மைஷோ போன்ற ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இங்கும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்த முடியும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Rs. 500, Rs. 1,000 Ban Useful Apps to Overcome a Cashless Day

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X