புதிய ரூ.2000 நோட்டுகள் ஆன்லைனில் அமோக விற்பனை.! காரணம் இது தான்.!

மோடியின் அறிவிப்பை தொடர்ந்து புதிய ரூ. 2000/- நோட்டுகளை வாங்கியோர் அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சித்திருக்கின்றனர்.

Written By:

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ரூ.2000/- நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் விலை ரூ.3,500 முதல் துவங்குகின்றது. ராசி பார்ப்பதில் நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுக்கு ராசியான எண் கொண்டிருக்கும் ரூ.2000/- நோட்டுகளை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக 786 எண் கொண்டிருக்கும் ரூ.2000/- நோட்டின் விலை ரூ.1,51,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நன்மை

ராசி மீது நம்பிக்கை கொண்டிருப்போர் தங்களுக்கு ராசியான நம்பர்களை வாகன பதிவு எண், மொபைல் போன் நம்பர் மற்றும் வீட்டு முவகரி என எல்லாவற்றிலும் வாங்க முயற்சிப்பர்.

தடை

ரூ.2000/- நோட்டுகள் விற்பனை செய்யப்படுவது குறித்துக் கேட்டபோது ஈபே தளக்கில் விற்பனைக்கு வரும் பொருட்கள் குறித்துத் தலையிடுவதில்லை என ஈபே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விற்பனை

இதுவரை யாரும் ரூ.2000/- நோட்டுகளை வாங்கவில்லை, எனினும் இது குறித்த பயனர்களின் விளம்பரங்கள் விரைவில் தளத்தில் இருந்து நீக்கப்படும் என ஈபே தெரிவித்துள்ளது.

அறிக்கை

ராசி எண்கள் கொண்ட இந்திய பணம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவது குறித்து மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் சார்பில் ஆன்லைன் விற்பனை தளங்களுக்குக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை அனுப்பப்பட்டது. நவம்பர் மாதங்களில் ரூ.1 நோட்டுகள் சுமார் 100 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

விற்பனை

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து ரூ.20, ரூ.50 நோட்டுகளும் ஈபே தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.900 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. 786 என்ற எண் கொண்டிருந்த ரூ.50 நோட்டு ரூ.5000க்கு விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Rs 2000 note on sale for Rs 1.51 lakh online,
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்