விபரீதம் : "இதெல்லாம் எங்கு போய் முடியும்..?!"

Posted by:

ஆதிகாலங்களில் மனிதன் தன் வேலைகளை தானே செய்து கொண்டான், அது - மனிதம். பின் தன் வேலைகளை செய்ய சக மனிதனை பயன்படுத்திக் கொண்டான் - அது முதலாளித்துவம். இப்போது நடப்பதோ - இயந்திரத்துவம், அதாவது எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்றாகி விட்டது.

'இறங்கி' வேலை செய்யும் - ஐரோபோட்ஸ்..!

அதிநவீனம் என்பது நம்மை எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்கிறதோ, அதே அளவு நம்மை மேன்மேலும் ஒதுக்கி தள்ளுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

அதாவது மனிதனுக்கு அதிக இடம் அளிக்காத, மனிதனை அதிகம் உழைக்க விடாத, மனிதனை அதிகம் யோசிக்க விடாத தொழில்நுட்பங்களை குறிப்பிடலாம்..!

மனித இனத்தை எதிர்க்கும் ரோபோட்கள்..?!

விரைவில், இயந்திர அடிமைத்தனம் என்ற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவத்ற்க்கில்லை. அதற்கு முழு காரணமும் மனிதனாகத்தான் இருக்க முடியும். அப்படியாக, "இதெல்லாம் எங்கு போய் முடியும்..?!" என்று யோசிக்க தூண்டும், மனிதனால் வடிவமைக்கப்பட்ட மிகவும் அசாத்திய சக்திகள் கொண்ட 10 ரோபோட்கள் தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

10. சாமுராய் ரோபோட் ஆர்ம் (Samurai Robot Arm) :

சாமுராய் மாஸ்டர் ஒருவர் மூலம் துல்லியமாக ப்ரோகிராம் செய்யப்பட்ட சாமிராய் ரோபோட் ஆர்ம்..!

09. சீட்டா ரோபோட் (Cheetah Robot) :

சென்சார் மூலம் வரும் தடைகளை முன்னரே அறிந்து மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் தாவி குதித்து ஓடும் சீட்டா ரோபோட். இது ராணுவ பயன்பாட்டிற்க்காக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

08. மினியேசர் பாட் (Miniature bot) :

0.8 இன்ச் நீளம் கொண்ட இதன் உடலை, 5 இன்ச் நீளம் கொண்ட கால்கள் மூலம் பேலன்ஸ் செய்து நீரில் மிதந்து நடக்கும் - மினியேசர் பாட். இது உளவு சார்ந்த ராணுவ பயன்பாட்டிற்க்காக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

07. ஹெக்டர் (Hector) :

6 கால்கள் கொண்ட இந்த நடக்கும் ரோபோட் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றது போல் நடந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

06. ஸ்பாட் (Spot) :

ஏற்றம், இறக்கம் மட்டுமின்றி எந்த ஒரு நிலையிலும் சிறிதும் நிலை தவாறாமல் நடக்கும், ஓடும் அசாத்தியமான ரோபோட் ஆன இதை ஓங்கி எட்டி மிதித்தாலும் கீழே விழாமல் சமாளித்துக் கொண்டு நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

05. ரோபோட்டிக் காக்ரோச் (Robotic Cockroach) :

கரப்பான் பூச்சியை பார்த்து வடிவமைக்கப்பட்ட ரஷ்யாவின் புதிய உளவாளி ரோபோட்..!

04. கேக்கோ ரோபோட் (Gecko Robot) :

தன்னை விட 100 மடங்கு அதிக எடையை தூக்கி கொண்டு, பல்லி போல் 'ஊர்ந்து ஊர்ந்து' சுவற்றில் ஏறும் வல்லமை கொண்டது இந்த கேக்கோ ரோபோட்..!

03. செல்ப் ஹீலிங் ரோபோட் (Self-Healing Robot) :

ஏதேனும் கோளாறு என்றால் தன்னை தானே சரி செய்து கொள்ளும்படியான 'இன்டெலிஜன்ட் அண்ட் ட்ரையல் ஏரர்' தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட ரோபோட்கள்..!

02. டாலெர் (DALER) :

வவ்வாலை போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இது பறக்கவும் செய்யும், நடக்கவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

01. ஹுமனாய்டு ஹுபோ (Humanoid Hubo) :

குறிப்பிட்ட ஒரு வேலையை மட்டும் திரும்ப திரும்ப செய்வதை தான் ரோபோட் என்போம். ஆனால் இது எந்த வேலையையும் செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

மேலே தொகுக்கப்பட்ட ரோபோட்கள் தங்களுக்கே உரிய அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் பயிற்சியின் போதும், சோதனை செய்யப்பட்ட போதும் எடுக்கப்பட்ட வீடியோக்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

வீடியோ :

சீட்டா ரோபோட்..!

வீடியோ :

மினியேசர் பாட்..!

வீடியோ :

ஹெக்டர்..!

வீடியோ :

ஸ்பாட்..!

வீடியோ :

ரோபோட்டிக் காக்ரோச்..!

வீடியோ :

கேக்கோ ரோபோட்..!

வீடியோ :

செல்ப் ஹீலிங் ரோபோட்..!

வீடியோ :

டாலெர்..!

வீடியோ :

ஹுமனாய்டு ஹுபோ..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
மனிதனால் வடிவமைக்கப்பட்ட மிகவும் அசாத்திய சக்திகள் கொண்ட 10 ரோபோட்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்