மத்திய அரசு உறுதி : ரூ.251க்கு ஸ்மார்ட்போன் 'கட்டாயம்' கிடைக்கும்.!!

Written By:

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை ரூ.251க்கு வழங்குவதாக கூறி சுமார் 25 லட்சம் முன்பதிவுகளை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் பெற்றிருக்கின்றது. இத்தகைய குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் எப்படி சாத்தியம் என்ற குழப்பம் நீடித்த நிலையில் முன்பதிவு செய்வர்கள் கருவியை பெறுவதில் சந்தேகம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த குழப்பம் குறித்து விவாதிக்க ரிங்கிங் பெல்ஸ் நிறுவன அதிகாரிகள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருந்தனர். இந்நிலையில் முன்பதிவு செய்தோருக்கு ஆறுதலாக இருக்கும் தகவலை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விலை :

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் எப்படி சாத்தியம் என்பதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கு பதில் கிடைத்திருக்கின்றது.

கருவிகள் :

அதன்படி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முதல் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் இறக்குமதி செய்ய இருப்பதாக தி இந்து' வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் :

அந்நிறுவனத்தின் முதல் 50 லட்சம் கருவிகளை ஜூன் 30 ஆம் தேதிக்குள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட 25 லட்சம் கருவிகளும் ஆஃப்லைன் மூலம் 25 லட்சம் கருவிகளும் அடங்கும்.

விளக்கம் :

ரிங்கிங் பெல்ஸ் தலைவர் அசோக் சத்தா மற்றும் விளம்பர பிரிவை சேர்ந்த மோஹித் கோயல் மற்றும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறையுடன் நடைபெற்ற சந்திப்பில் தங்களது வியாபார திட்டம் குறித்து விளக்கமளித்தனர்.

ஆலை :

அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் ரூ.350 கோடி முதலீட்டில் இரண்டு தயாரிப்பு ஆலைகளை கட்டமைக்க அந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வு :

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சார்ந்த அனைத்து தகவல்களையும் சரி பார்க்க தொலைதொடர்பு பிரிவின் தலைவர் அருனா ஷர்மாவுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு :

கருவி வரும் வரை இனி முன்பதிவு செய்தவர்கள் நிம்மதியாக காத்திருப்பதை தவிற வேறு வழி இல்லை.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Ringing Bells will import first 50 lakh smartphones, says government official. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்