மக்கள் பணத்தை திரும்பி கொடுப்போம் ரிங்கிங் பெல்ஸ் அதிரடி.!!

Written By:

ஃப்ரீடம் 251 கருவியை முதலில் முன்பதிவு செய்தோருக்கு ஓர் நற்செய்தியை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் கருவி உண்மையில் விநியோகம் செய்யப்படுமா இல்லையா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கின்றது.

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனான ஃப்ரீடம் 251 கருவியை அறிவித்திருக்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முதல் முன்பதிவின் போது வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை திரும்ப வழங்குவதாக தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

முன்பதிவு

ஃப்ரீடம் 251 கருவிகளை முன்பதிவு செய்த முதல் 30,000 வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

க்ராஷ்

இதன் பின் அதிக வாடிக்கையாளர்களின் பயன்பாடு காரணமாக இணையதளம் க்ராஷ் ஆகிவிட்டதாக ரிங்கிங் பெல்ஸ் தெரிவித்துள்ளது.

தகவல்

இதோடு கருவியை முன்பதிவு செய்த முதல் 30,000 பேருக்கும் பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக ரிங்கிங் பெல்ஸ் நிர்வாக இயக்குனர் மோஹித் கோயல் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

கேஷ் ஆன் டெலிவரி

பணம் திரும்ப பெற்ற வாடிக்கையாளர்கள் கருவியை கேஷ் ஆன் டெலிவரி முறையில் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம்

க்ராஷ் ஆன இணயதளம் 24 மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பட துவங்கிய போது இரண்டாம் கட்ட முன்பதிவு செய்தவர்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் பணம் செலுத்தும் லின்க் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முறை

முன்பதிவு செய்த அனைவரும் கருவியை கேஷ் ஆன் டெலிவரி முறையில் பெற்று கொள்ள முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என ரிங்கிங் பெல்ஸ் தலைவர் அசோக் சத்தா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

திரை

ஃப்ரீடம் 251 கருவியில் 4 இன்ச் க்யுஎச்டி ஐபி டிஸ்ப்ளே, 3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Ringing Bells refund Freedom 251 payments Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்