ஃப்ரீடம் 251 'இல்லாத போனுக்கு' கேஷ் ஆன் டெலிவரி.!!

Written By:

ரிங்கிங் பெல்ஸ் நிருவனம் கேஷ் ஆன் டெலிவரி அம்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஃப்ரீடம் 251 கருவிகளை ரெஜிஸ்டர் செய்திருப்பவர்களில் முதல் 25 லட்சம் பேருக்கு கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 ஃப்ரீடம் 251 'இல்லாத போனுக்கு' கேஷ் ஆன் டெலிவரி.!!

இந்த தகவல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்கள் நிலை குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் கேஷ் ஆன் டெலிவரி அம்சம் இனி ரெஜிஸ்டர் செய்தவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும் ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப அளிப்பது குறித்தும் எவ்வித தகவலும் இல்லை.

கருவிகளுக்கான முன்பதிவுகளை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் நிறுத்து விட்டது என்பதோடு ஃப்ரீடம் 251.காம் தளத்தில் மட்டும் இதுவரை ரூ.1.75 கோடிக்கு முன்பதிவு பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஃப்ரீடம் 251 'இல்லாத போனுக்கு' கேஷ் ஆன் டெலிவரி.!!

ஃப்ரீடம் 251 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா கிடைக்காத என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உண்மையில் என்ன நடக்கும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Ringing Bells now accepting cash on delivery Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்