
மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று புதிய சர்வரை மும்பையில் அமைத்துள்ளது பிளாக்பெர்ரி. இதன்மூலம், பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களையும் மத்திய அரசு கண்கானிக்க முடியும்.
கனடாவை சேர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் தொடர்பு சேவையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், பிளாக்பெர்ரியின் சர்வர் இந்தியாவில் இல்லாததால், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தொடர்புகளை மத்திய அரசு கண்காணிக்க முடியாத நிலை இருந்தது.
இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் சதிச் செயல்களை நிகழ்த்தும் ஆபத்துக்கள் அதிகம் இருந்தது. எனவே, வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க ஏதுவாக இந்தியாவில் சர்வர் அமைக்குமாறு பிளாக்பெர்ரியை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
ஆனால், பிளாக்பெர்ரி இதற்கு சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்தது. இந்தியாவில் சர்வர் அமைக்கவில்லையென்றால், சேவையை முடக்குவதாக மத்திய அரசு பிளாக்பெர்ரிக்கு நெருக்கடி கொடுத்ததோடு, காலக்கெடுவும் நிர்ணயித்தது.
இந்த நிலையில், மத்திய அரசின் நெருக்கடி முற்றியதையடுத்து, மும்பையில் தனது சர்வரை அமைத்துள்ளது பிளாக்பெர்ரி. இதன் மூலம், வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றத்தை மத்திய அரசு இனி கண்காணிக்க முடியும்.
கனடாவில் உள்ள பிளாக்பெர்ரி சர்வர் வசதியின் மூலம் உலகளவில் ஒட்டு மொத்த பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களையும் கண்கானிக்க முடியும். இந்த சர்வர் வசதி இப்போது பிரத்தியேகமாக இந்தியாவிற்கு மட்டும்
வழங்கப்படுவதால் இனி இந்திய பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களின் தொடர்புகோளை மட்டும் சிறப்பாக கண்கானிக்கலாம்.















மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இந்தியாவில் சர்வர் அமைத்தது பிளாக்பெர்ரி http://t.co/LXkL8wck #blackberry