விற்பனை சரிவில் சிக்கித்தவிக்கும் ஜியோ : உண்மை பின்னணி.!

By Meganathan
|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைஃப் பிரான்டெட் 4ஜி எல்டிஇ கருவிகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை மிகக் குறுகிய காலகட்டத்தில் ஆக்கிரமித்தது. லைஃப் கருவியை வாங்கினால் மட்டுமே ஜியோ 4ஜி பிரீவியூ சலுகையைப் பெற முடியும் என்பதே இதற்குக் காரணமாக இருந்தது. ஆனால் இந்நிலை வேகமாக மாறிவிட்டதைத் தொடர்ந்து லைஃப் கருவிகளின் விற்பனை குறைந்து வருகின்றது.

ஏப்ரல் 2016 காலகட்டத்திற்கு பின் லைஃப் கருவிகளுக்கான விற்பனை சரிந்து வருவதாக சிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவிகள்

கருவிகள்

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் 1.82 கோடி 4ஜி கருவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன, முதல் காலாண்டில் மொத்தம் 1.54 கோடி 4ஜி கருவிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் 97.8 சதவீதம் ஸ்மார்ட்போன் கருவிகள்,மீதம் 1.6 சதவீதம் டேட்டா கார்டு மற்றும் 0.6 சதவீதம் டேப்ளெட் கருவிகள் ஆகும்.

முதலிடம்

முதலிடம்

40 சதவீத பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் லெனோவோவினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. மைக்ரோமேக்ஸ் மற்றும் லைஃப் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடித்தன. இந்த நிறுவனங்கள் 9 மற்றும் 8 சதவீத பங்குகளை பெற்றிருந்தன.

பின்தங்கிய நிலை

பின்தங்கிய நிலை

ஏப்ரல் 2016'க்கு பின் லைஃப் கருவிகளுக்கான விற்பனை சரிந்துள்ளது, இதன் காரணமாக வரும் காலாண்டுகளில் இவை பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடும் என்றாலும் டேப்ளெட் விற்பனையில் இதன் பங்குகள் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

லைஃப் ஸ்மார்ட்போன் கருவிகளின் விற்பனை சரிந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, முன்பு இந்தக் கருவிகளில் மட்டுமே ஜியோ பிரீவியூ சலுகை வழங்கப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் இந்தக் கருவிகளை வாங்கினர்.

வன்பொருள்

வன்பொருள்

பெரும்பாலான ஜியோ போன்களில் சிறப்பான வன்பொருள் அம்சங்கள் வழங்கப்படவில்லை, மேலும் ஜியோ பிரீவியூ சேவையைப் பெற ஜியோ கருவிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று லைஃப் அல்லாத பல்வேறு 4ஜி கருவிகளிலும் ஜியோ சேவை கிடைக்கின்றது.

விற்பனை

விற்பனை

விவோ, ஒப்போ, லீஇகோ, ஜியோனி, ஒன்பிளஸ், ஏசுஸ் மற்றும் இன்போகஸ் போன்ற நிறுவனங்களின் விற்பனை சதவீதம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

4ஜி கருவிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதே ஜியோவின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் சிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சுமார் 12.5 கோடி 4ஜி கருவிகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது, 2017க்குள் ஜியோ இந்த எண்ணிக்கையை 25 முதல் 30 கோடி வரை அதிகரிக்க முயற்சிக்கும் என சிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
RIL's Lyf phones see major sales decline Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X