இந்த கண்டுபிடிப்பு நிஜமாகேவ நம் மின்சார கட்டணத்தை குறைக்குமா..?

Written By:

நீங்கள் விரைவில் உங்கள் வீட்டின் 'குளிர்ச்சி மற்றும் வெப்பமூட்டும்' மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம். அது சாத்தியமாகும் போது ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் டேல்யா மில்லிரோன் மற்றும் அவரது சகாக்கள் புதிதாக கண்டுப்பிடித்த ஒரு நெகிழ்வான ஸ்மார்ட் பொருளுக்கு (flexible smart material) தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த நெகிழ்வான ஸ்மார்ட் பொருள் கண்டுபிடிப்பு நிஜமாகேவ நம் மின்சார கட்டணத்தை குறைக்குமா..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கட்டுப்படுத்தும் :

இந்த புதிய நெகிழ்வான ஸ்மார்ட் பொருள் ஆனது ஜன்னல்கள், சூரிய எதிர்ப்பு வீட்டுக்கூரைகள் அல்லது வளைந்த கண்ணாடி பரப்புகளில் 'கூட்டுருமமான ஒருங்கிணைக்கப்பட்டு, (இணைக்கப்பட்டால்) இது சூரிய வெப்பம் மற்றும் ஒளி ஆற்றலை கட்டுப்படுத்தும்.

எளிமை :

கண்ணாடிகளில் நிகழ்த்தப்படும்  வழக்கமான பூச்சுகளை விட பிளாஸ்டிக்கில் இந்த புதிய வெப்பநிலை செயல்முறை பொருளை எளிமையாகவும், விலை குறைவான முறையிலும் பூச முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மடங்கு :

ஒரு வழக்கமான உயர் வெப்பநிலை செயல்முறை உற்பத்தி பூச்சுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய பொருளின் செயல்முறை திறனானது இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் வண்ணம் இதுவொரு தனிப்பட்ட நானோ கட்டமைப்பு கொண்டுள்ளது.

சக்தி :

மிகவும் குறைந்த சக்தியை பயன்படுத்தி, விரைவாக தெளிவாக நிறம் மாறும் தன்மை கொண்ட இந்த புதிய பொருள் சார்ந்த ஆய்வுக்கட்டுரையை நேச்சர் மெட்டிரியல்ஸ் என்ற ஆன்லைன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செயல்முறை விளக்கம் :

ஒரு நெகிழ்வான ஏலேக்ட்ரோக்ரோமிக் சாதனம் பயன்படுத்தி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு சிறிய மின்சார சக்தி (சுமார் நான்கு வோல்ட்) மூலம் பொருளின் நிறம் மாற்றப்படுவதும், வெப்ப உற்பத்தி ஒலிபரப்பும், அருகாமை அகச்சிவப்பு கதிர்கள் கட்டுப்படுத்தப்படுவதும் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

மின்சார கட்டணம் :

அவ்வண்ணமே மின்சார கட்டண சேமிப்பை இலக்காக கொண்டு உருவாக்கபப்டும் ஸ்மார்ட் ஜன்னல்கள், வீடுகள் மற்றும் வணிக தளங்களின் வெப்பநிலையயை கட்டுக்குள் கொண்டு வரும்.

கிரிஸ்டல் :

அதன் பதப்படுத்தப்பட்ட உயர் வெப்பநிலை, ஒழுங்கற்ற அமைப்பு, அணுக்கள் இல்லாத நீண்ட தூர அமைப்பு கொண்ட ஒரு பொதுவான கிரிஸ்டலை போன்றது தான் இந்த புதிய ஏலேக்ட்ரோக்ரோமிக் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்படும் :

இதன் வேதியியல் அமுக்கப்பட்ட நியோபியம் ஆக்சைடு, அயனிகளை மிகவும் சுதந்திரமாக ஓடவும், வெளியேறவும் அனுமதிக்கிறது. அதன் விளைவாக வழக்கமான பதப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சாளர பொருளை விட இருமடங்கு ஆற்றல் மிக்கதாய் இது செயல்படும் என்கிறது ஆய்வு.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Electricity bills to go down as researchers invent a new flexible smart material. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்