ரிலையன்ஸ் ஜியோஃபை : பாக்கெட் இண்டர்நெட் வசதியை பெறுவது எப்படி..?

Written By:

எங்கு பார்த்தாலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றி தகவல்கள் தான். இப்போதைக்கு உங்களுடைய ஒரே கேள்வியாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பெறுவது மதிப்பு மிக்கதா இல்லையா என்பதாக தான் இருக்கும். நீங்கள் ஒரு இலவச ஜியோ சிம் பெறவும் அதன் வாயிலாக மூன்று மாதம் வரை நீங்கள் வரம்பற்ற இணைய பயன்பாடு பெறவும் வழிமுறைகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

அதன் வாயிலாக பலவகையான சேவைகளை முக்கியமாக செய்திகள், இசை, மற்றும் டிமாண்ட் வீடியோ போண்றவைகளை பெற முடியும். மறுபுறம் இது அனைத்தையும், மலிவான விலையில் உங்கள் வீடு முழுவதும் இன்டர்நெட் வசதியை கொண்டு வர உதவும் ஒரு சாதனம் தான் - ரிலையன்ஸ் ஜியோஃபை.!

அந்த சாதனமானது என்ன..? அதன் விலை என்ன..? அது கொண்டுள்ள திட்டங்கள் என்னென்ன..? என்பதை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நடமாடும்' ஹாட் ஸ்பாட் :

ஜியோஃபை என்பது ஒரு தனிப்பட்ட, பாக்கெட் அளவு வடிவிலான ஒரு 'நடமாடும்' ஹாட் ஸ்பாட் ஆகும்.

இடையே :

உங்கள் பாக்கெட்டில் பொருந்தும் சிறிய சாதனமான இது உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப்களுக்கு இணைய வசதியை வழங்கும் 4ஜி நெட்வொர்க் மற்றும் உள்ளூர் வைஃபை நெட்வொர்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும்.

ஆன்லைன் :

ரீசார்ஜபில் பேட்டரி கொண்ட இக்கருவி மூலம் உங்கள் வீடு முழுதையும் ஆன்லைன் தளமாக மாற்றலாம்.

தனிப்பட்ட :

மற்றும் எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்யலாம், நீங்கள் நினைத்த இடத்திற்கு தனிப்பட்ட இணைய அணுகலை கொண்டு செல்லலாம்.

ஜியோ ஜாயின் ஆப் :

எல்லாவற்றை விட மிக சுவாரசியமாக ஜியோ ஜாயின் ஆப் (Jio Join app) பயன்படுத்தி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை நிகழ்த்த முடியும். அதாவது உங்கள் தொலைபேசி 4ஜியை ஆதரிக்கவில்லை என்றாலும்கூட, நீங்கள் ஜியோஃபை மூலம் அதை நிகழ்த்திக்கொள்ள முடியும்.

சிம் :

ரிலையன்ஸ் சிம் உடன் இணைக்கப்படும் ஜியோஃபை ஆனது மற்ற சாதனங்களுக்கும் ( உங்கள் தொலைபேசி போன்ற) இணைய அணுகலை வழங்கும்.

சலுகை :

உடன் சிம் கார்டுகளில் கிடைக்கப்பெறும் பிற ரிலையன்ஸ் சலுகைகளையும், அதற்கான கட்டணம் செலுத்தி உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

ரிலையன்ஸ் டிஜிட்டல் :

ஒரு பாஸ்போர்ட் புகைப்படம் , ஒரு புகைப்பட அடையாள அட்டை, மற்றும் முகவரி அட்டை அளித்து அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் / ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி கடைக்கு சென்று ஜியோஃபை சாதனத்தை வாங்கிக்கொள்ள முடியும்.

விலை :

ஜியோஃபை கருவியின் விலை ரூ.2899/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக விலை என்பதும் இப்போது வரை நிறுவனம் உண்மையான விலை மற்றும் திட்டங்கள் சார்ந்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Reliance JioFi Device - How to Buy, Price, Plans, and Everything You Need to Know. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்