ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் : சிறந்த சேவை வழங்கும் நிறுவனம் எது??

Written By:

இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் விற்பனை துவங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு இணைய வர்த்தகர்களும் புதிய ஐபோன் கருவிகளுக்கு சலுகைகளை அறிவித்தனர்.

புதிய ஐபோன் கருவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வர்த்தகர்கள் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி போன்றவற்றை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய டெலிகாம் நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கின்றன.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை வாங்கும் போது தங்களது நெட்வர்க் சேவையை இணைத்து பிரத்தியேக சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அவ்வாறு இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வரும் சில சலுகைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போமா..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஏர்டெல்

இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ஐபோன் 7 அல்லது ஐபோன் 7 பிளஸ் கருவிகளை வாங்கும் பயனர்களுக்கு 10ஜிபி 4ஜி டேட்டாவினை 12 மாதங்களுக்கு வழங்குகின்றது. ஏர்டெல் மை பிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் பயனர்கள் இந்த சேவையைப் பெற முடியும்.

இத்துடன் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ், மற்றும் ஏர்டெல் Wynk மியூசிக் மற்றும் Wynk திரைப்படங்களை பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ தனது வெல்கம் ஆஃபர் மூலம் சுமார் 15 மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கி வருகின்றது. இதில் 20 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், ஜியோ ஹாட்ஸ்பாட் மூலம் 40 ஜிபி வை-பை டேட்டா மற்றும் ஜியோவின் பிரீமியம் தரவுகளை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

இந்தச் சலுகையானது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் மட்டுமில்லாமல் ஐபோன் 6 எஸ், 6எஸ் பிளஸ், 6 பிளஸ் மற்றும் எஸ்இ பயனர்களுக்கும் வழங்கப்படுகின்றது.

 

பிஎஸ்என்எல்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு பிரத்தியேக சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவிக்கவில்லை என்றாலும் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் டபுள் டேட்டா சலுகை பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூற வேண்டும்.

புதிய திட்டத்தின் படி ரூ.1,498 செலுத்தும் போது 9 ஜிபிக்கு பதிலாக 18 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, ரூ.2,798 செலுத்தும் போது 18 ஜிபிக்கு பதில் 36 ஜிபி வழங்கப்படுகின்றது, ரூ.3,998 செலுத்தும் போது 30 ஜிபிக்கு பதில் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, ரூ.4,498 செலுத்தும் போது 40 ஜிபிக்கு பதில் 80 ஜிபி வரை வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எது சிறந்தது

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் சிறப்பானதாக இருந்தாலும், மற்ற நெட்வர்க்கள் வழங்கும் சலுகைகளும் பயனர்களுக்கு இதுவரை இல்லாத சலுகைகளையே வழங்குகின்றது. மொத்தத்தில் எந்தச் சேவை சிறந்தது என்பதை விட அனைத்து நெட்வர்க்களிலும் முன்பை விட அதிக சலுகைகள் வழங்கப்படுவது பயனர்களாகிய நமக்கு லாபம் தரக்கூடிய விடயமாகவே இருக்கின்றது.

சேவை

எல்லா நிறுவனங்களும் போட்டி காரணமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் போதிலும், இவை அனைத்திலும் பயனர்களுக்கான பிரச்சனைகள் இன்றும் தொடர் கதையாகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிக்னல் கோளாறு, கால் டிராப் மற்றும் நெட்வர்க் பிரச்சனை என இந்தப் பட்டியல் நீண்டாலும் இதற்கு மட்டும் இன்றளவும் தீர்வே கிடைக்கப்பெற வில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Reliance Jio vs Airtel vs BSNL, Which Offers Best 4G Tariff Plans
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்