பிப்ரவரி மாதத்திலேயே கணிக்கப்பட ஜியோவின் அழிவு காலம், ஆரம்பம்.!

ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்றால் அது எதனால்.? ஏன்.? எப்படி.? என்பதற்கான விரிவான விளக்கத்தையும் அப்போதே வழங்கி இருந்தனர்.

|

கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தன. ஏன் அவர்கள் அப்படி கூறுகிறார்கள்.? ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்றால் அது எதனால்.? ஏன்.? எப்படி.? என்பதற்கான விரிவான விளக்கத்தையும் அப்போதே வழங்கி இருந்தனர்.

டெலிகாம் சந்தையில் புதிய வரவாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, தொடர்ந்து சந்தாதாரர்களை சேர்க்கின்ற போதிலும் கூட தற்போது சேர்த்தல் வேகம் குறைந்து போயுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் - டிராய் வெளியிட்டுள்ள மாதாந்திர தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தொலைத் தொடர்பு துறையின் யூபிஎஸ் அறிக்கை ஜியோவின் அழிவு காலத்தை அல்லது வரவிருக்கும் சிக்கலான நாட்களை வெளிப்படையாக அறிவிக்கிறது என்றே கூறலாம்.

அழிவு காலம் ஆரம்பமாகிறது

அழிவு காலம் ஆரம்பமாகிறது

இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை அள்ளியள்ளி வழங்கிய ரிலையன்ஸ் ஜியோவின் இலவச விளம்பர சேவைகளானது மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வரவும், அந்த இடத்தில் இருந்து அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

போராடி வருகின்றனர்

போராடி வருகின்றனர்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மூலம் நான்காவது தலைமுறை லாங்-டேர்ம் எவல்யூஷன் (4G-LTE) நெட்வொர்க்கின் கீழ் தரவு மற்றும் குரல் சேவைகளை வழங்க தொடங்கியதிலிருந்து பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் இதர சேவை வழங்குநர்கள் தங்கள் நிதிநிலைகளை தக்கவைத்துகொள்ள போராடி வருகின்றனர்.

வலி மிகுந்த ஒரு காலம்

வலி மிகுந்த ஒரு காலம்

ஜியோ சேவைகளின் வணிக ரீதியிலான அறிமுகப்படுத்தலின் போது, ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலாக அனைத்து விடயங்களும் ஒரு நிலையான மற்றும் நிதிநிலைப்பாடு கொண்டிருக்கும் என்று அம்பானி நம்பிக்கை தெரிவித்திருந்தார், உடன் இந்த தொலை தொடர்பு துறை வலி மிகுந்த ஒரு காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது இறுதியில் பல நல்ல விடயங்கள் வெளிவரும்" என்றும் அவர் கூறியிருந்தார்.

எழுச்சி அடையும் அதே நேரத்தில்

எழுச்சி அடையும் அதே நேரத்தில்

இதனையெல்லாம் ஆராய்ந்த பெங்களூரை சேர்ந்த தொலைத் தொடர்பு ஆய்வாளர் ஆன ஜி கிருஷ்ண குமார் ஜியோ நிறுவனம் ஆனது தொலைத்தொடர்பு துறையில் எழுச்சி அடையும் அதே நேரத்தில் தரவு சந்தை தீவிரப்படுத்தும் போட்டியை தொடர்ந்து நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருந்தார்

மெல்ல மெல்ல

மெல்ல மெல்ல

மேலும் அவர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவடைந்து எப்போது அது கட்டண சேவையாக உருவெடுக்கிறதோ அன்று முதல் மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களை இழக்கும். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய பயனர்களை தக்கவைத்துகொள்ள போராடலாம் என்று என்று கூறியிருந்தார்

50% - 60% பயனர்கள்

50% - 60% பயனர்கள்

அதாவது கிருஷ்ண குமாரின் கணிப்புப்படி, ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து, வர்த்தக ரீதியிலான ரிலையன்ஸ் ஜியோவின் 50% - 60% பயனர்கள் சேவையில் இருந்து தங்களை விலக்கி கொள்வார்கள் என்கிறார். இந்திய சூழலில் பெரும்பாலான பயனர்கள் ப்ரீபெய்ட் பயனர்கள் ஆவர் மற்றும் இந்த பிரிவின் கீழ் இருக்கும் பயனரின் சராசரி வருவாய் (Arpu) ரூ.100 -130/- என்பதை சுற்றி உள்ளது. ரூ.300/- என்ற (நிர்ணயத்தை சுற்றிய) ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கட்டண சேவையோடு ஒப்பிட்டால் எத்தனை பேர் இந்த சேவையை அணுகுவார்கள் என்பது கேள்வி குறி தான் என்று கூறியிருந்தாஎன்று கூறியிருந்தா கிருஷ்ண குமார்.

இலவச சேவை என்பதால்

இலவச சேவை என்பதால்

மேலும் வெளிப்படையாக "ஜியோ ஒரு இலவச சேவை என்பதால் தான் மக்கள் அதில் குவிந்துள்ளனர். அது கட்டண சேவையாக மாறியதும் இந்த நெட்வொர்க்கில் இருக்கும் 50% -60% வெளியேறுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று குமார் கூறியுள்ளார். இன்று இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்களில் 96% ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ஆவர். ஜியோவின் இந்த ரூ.300 என்ற (நிர்ணயத்தை சுற்றிய) பிளான் ஆனது சந்தாதாரர்களை ஈர்க்க முயற்சிக்கும் ஆனால் நெட்வொர்க்கின் குரல் அழைப்பு தரம் மோசமாக இருப்பதால் மொபைல் போர்டர்களை ஈர்க்க முடியாமல் போகலாம் என்றும் குமார் கூறியிருந்தார்.

4% மட்டுமே

4% மட்டுமே

அவரை பொறுத்தவரை, ஜியோ சேவையானது சராசரி வருவாயாக (Arpu) ரூ.490/- கொண்டுள்ள போஸ்ட்பெயிட் பயனர்களை மட்டுமே ஈர்க்க முடியும்., அதாவது 4% இந்திய பயனர்களை மட்டுமே ஈர்க்க முடியும் என்று கூறியிருந்தார். அதை அப்படியே நிரூபிக்கும் வண்ணம் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, முந்தைய மாதத்தின் 12.2 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஜியோ டெல்கோ 5.8 மில்லியன் சந்தாதாரர்களை மட்டுமே சேர்த்துள்ளது.

மார்ச் மாதத்தில்

மார்ச் மாதத்தில்

இந்த மெதுவான வேகத்திலும் கூட முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகியவைகளை பின்தள்ளி முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக பிப்ரவரி மாதத்தின் 8.8 சதவீதத்திலிருந்து மார்ச் மாதத்தில் அதன் பங்கு சந்தை 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது

நீண்ட கால வெற்றி

நீண்ட கால வெற்றி

ஒப்பீட்டில் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் பிப்ரவரியில் முறையே 1.2 மில்லியன், 1.2 மில்லியன் மற்றும் 0.8 மில்லியனுக்கும் அடுத்த மாதத்தில்பி 3 மில்லியனுக்கும், 2.1 மில்லியனுக்கும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. இந்த தரவில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ பயனர் நினைத்ததை விட வல்லுநர்கள் கணிதத்தை விட கூடுதலாக குறைவதும், இதனால் ஏர்டெல் போன்றே நிறுவனங்கள் தான் நீண்ட கால வெற்றியாளராக இருக்கும் என்பதும் வெளிப்படை.!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio user addition slowing; Airtel could be long-term winner. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X