பீச்சர் போன்களில் ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்!?

4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் ஜியோ சேவைகள் மெல்ல, பீச்சர் போன்களுக்கும் நீட்டிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால் சேவைகளின் மூலம் ஏற்பட்ட போட்டி மும்முரமாகியிருக்கும் நிலையில் அடுத்த அதிரடி ஒன்றிற்கு ஜியோ தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ள ஜியோ சேவையை மற்ற கருவிகளுக்கும் நீட்டிக்கும் முயற்சிக்கான ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தயாரிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் பீச்சர் போன் கருவிகளைத் தயாரிக்க முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாய்ஸ் கால்

அதன் படி ரிலையன்ஸ் ஜியோ பீச்சர் போன்களில் வோல்ட்இ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு, பயனர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் சேவையினை வழங்க இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விலை

ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் அம்சம் கொண்ட பீச்சர் போன் கருவிகளின் விலை ரூ.1000/- முதல் ரூ.1500/- வரை இருக்கும் எனக் கூறப்படுகின்றது. மொபைல் போன்களைத் தயாரிக்கக் கார்பன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

சேவை

தற்சமயம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் கிடைக்கும் ஜியோ வாய்ஸ் கால் சேவைகள் இத்திட்டங்கள் நிறைவேறும் போது பீச்சர் போன்களுக்கும் கிடைக்கும். இதனால் பீச்சர் போன் பயனர்கள் வாழ்நாள் முழுக்க ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

எதிர்பார்ப்பு

தற்சமயம் இண்டர்கனெக்டிவிட்டி போன்ற பிரச்சனை காரணமாக வாய்ஸ் கால் மேற்கொள்வதில் கோளாறு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. இவை தீர்ந்தவுடன் பீச்சர் போன்களில் ஜியோ வாய்ஸ் கால் சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Reliance Jio Unlimted Free Calls for Basic Mobile Phones
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்