ரிலையன்ஸ் ஜியோ பீதி : 10 ஜிபி இலவச 4ஜி வழங்கும் ஏர்டெல்.!

ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டி முனைப்பு காரணமாக 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என்ற மேலுமொரு சலுகையை ஏர்டெல் வழங்குகிறது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் தொலை தொடர்பு பிரிவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம். அதன் இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு சலுகைகள் இந்தாண்டின் இறுதி வரை கிடைக்கப் பெறும் என்றாலும் கூட ஜனவரி 2017 முதல் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வழங்கப்படும் கட்டண திட்டங்கள் மிகவும் மலிவானதாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

ரிலையன்ஸ் ஜியோ கிளப்பும் வாடிக்கையாளர்கள் ஆக்கிரமிப்பு பீதிகளுக்கு சரியான போட்டியாளராக திகழும் ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது தன் பங்கிற்கும் சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படியான ஒரு சலுகை தான் 10 ஜிபி அளவிலான இலவச 4ஜி டேட்டா..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எஸ்எம்எஸ்

கூறப்படும் தகவலின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவு பெறும் ஒரு எஸ்எம்எஸ் ஆனது சேவை மையத்தில் இருந்து கிடைக்கப்பெறும். எனினும், இந்த திட்டம் ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜனவரி 1, 2017 முதல்

இந்த ஏர்டெல் எஸ்எம்எஸ் ஆனது ஜனவரி 1, 2017 முதல் அதாவது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை வணிக வெளியீட்டு நாள் முதல் கிடைக்கும் பயனர்களுக்கு கிடைக்கும் இதன் மூலம் இலவசமாக 10 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இலவச டேட்டா

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் பயனர்களுக்கு வழங்கப்படும் இந்த 10 ஜிபி அளவிலான இலவச டேட்டாவானது 5ஜிபி இரவு பயன்பட்டு தரவு, 5 ஜிபி இதர நேர பயன்பட்டு தரவாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரதரவு பயன்பாடானது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செல்லுபடியாகும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போர்ட்

குறிப்பிடத்தக்க விடயமாக இது அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் கிடைக்காது யாரெல்லாம் ஏர்டெலில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்ய முயன்றுள்ளார்களோ அவர்களால் மட்டுமே இந்தசமீபத்திய வாய்ப்பை பெற முடியும். இதன் மூலம் தெளிவாக ஏர்டெல் அதன் பயனர்களுக்கு தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தில் இதை நிகழ்த்துவதை அறிந்துக்கொள்ள முடிகிறது.

ரூ.249/-க்கு 10 ஜிபி

வேறு ஒரு சலுகை மூலம் ஏர்டெல் அதன் பயனர்களுக்கு 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை ரூ.249/-க்கு விலையில் பயனர்களுக்கு வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

ரூ.259/-க்கு 10 ஜிபி ஏர்டெல் 4ஜி தரவு வாய்ப்பை பெறுவது எப்படி.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Reliance Jio Threat: Airtel Offers 10 GB 4G Data for FREE. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்