ரகசிமாய் கசிந்த ரிலையன்ஸ் ஜியோ4ஜி கட்டணம் : இது உண்மையா நம்பலாமா.??

By Meganathan
|

2003 ஆம் ஆண்டு இந்திய தொடஞலைத்தொடர்பு சந்தையைப் புரட்டி போட்ட ரிலையன்ஸ் நிறுவனம் தனது சேவைகளின் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ பான்-இந்தியாவின் 4ஜி உரிமம் பெற்றதில் இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி சேவைகளை பிரீவியூ திட்டங்களின் மூலம் வழங்கி வருகின்றது. இலவச சேவைக்கான வரவேற்பு நாடு முழுக்க தீயாய் பரவி இருக்கின்றது.

மோகம்:

மோகம்:

பிரீவியூ சேவைகள் குறிப்பிட்ட 4ஜி கருவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தும் வாடிக்கையாளர்கள் இலவச 4ஜி சிம் கார்டுகளை வாங்க வரிசையில் நிற்கும் நிலை தொடர் கதையாகவே இருக்கின்றது.

வேலிடிட்டி:

வேலிடிட்டி:

இலவச பிரீவியூ சேவைகள் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் அந்நிறுவனம் நிர்ணயம் செய்ய இருக்கும் கட்டணம் குறித்து யாரும் யோசிக்கவில்லை.

கட்டணம்:

கட்டணம்:

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கான கட்டணங்கள் குறித்த தகவல் இணையத்தில் ரகசியமாகக் கசிந்துள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கான கட்டணங்கள் குறித்த துறுப்பு சீட்டு இணையத்தில் பரவி வருகின்றது.

பட்டியல்:

பட்டியல்:

அதன் படி ரகசியமாக வெளியாகி தற்சமயம் வேகமாகப் பரவி வரும் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்ஷாட்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக் கட்டணங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

குறைவு:

குறைவு:

குறைந்த பட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதன் படி ரூ.50 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 ஜிபி வரை 4ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் 500 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் சேவையை பெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்ஸ்:

ஆப்ஸ்:

ஒட்டு மொத்த சேவைகளை வழங்கும் நோக்கில் ஜியோ பல்வேறு செயலிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. இதில் பயனர்கள் இசை, திரைப்படம், நாளிதழ் போன்றவற்றை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டம்:

திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையில் ரூ.100 செலுத்து ரீசார்ஜ் செய்யும் போது 20 ஜிபி 4ஜி டேட்டா, 200 எஸ்எம்எஸ், 1000 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் சேவை மற்றும் மூன்று ஜியோ ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகின்றது.

அதிகம்:

அதிகம்:

இதே போல் ரூ.400 செலுத்தும் போது 40 ஜிபி 4ஜி டேட்டா, 400 எஸ்எம்எஸ், 1500 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், ஐந்து ஜியோ ஆப்ஸ்களை பயன்படுத்தும் வசதியைப் பெற முடியும், மேலும் ரூ.400 செலுத்தும் போது 60 ஜிபி 4ஜி டேட்டா, 500 எஸ்எம்எஸ், 2500 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் ஏழு ஜியோ ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட்டிப்பு:

நீட்டிப்பு:

முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துத் திட்டங்களுக்கும் சுமார் 30 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. பல்வேறு இதர நிறுவன கருவிகளுக்கும் பிரீவியூ சேவை நீட்டிக்கப்படும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ வெளியீடு இதன் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

உண்மை:

உண்மை:

இணையத்தில் வேகமாகப் பரவி வரும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி விலை பட்டியலின் உண்மைத் தன்மை குறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும் ஜியோ விலை பட்டியல் மற்ற நிறுவனங்களை விடக் குறைவாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது. இங்கு வெளியான பட்டில் உண்மையானாலும் நமக்கு லாபம் தான்.

Best Mobiles in India

English summary
Reliance Jio tariff plans screenshot Leaked Online Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X