இராஜ தந்திரி அம்பானி : ஜியோ இலவச சேவை நீட்டிப்பின் பின்னணி என்ன.?

ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை என்றால் என்ன.? அதன் நன்மைகள் என்னென்ன.? முக்கியமாக நாம் யூகிக்க வேண்டிய பின்னணிகள் என்ன.?

|

ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் ஆன்லைன் வருவோமா.?? மறுபடியும் 4ஜி வேக இண்டர்நெட்டை அனுபவிப்போமா.? என்ற நமது மனக்குரல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் "ராஜ தந்திரி" முகேஷ் அம்பானி காதில் நேரடியாக கேட்டு விட்டதை போலவே அறிவிப்பொன்றை நிகழ்த்தினார். அதில் - "உங்களின் குரல்கள் எங்களுக்கு கேட்டு விட்டது" என்று ஆரம்பித்து மார்ச் 31-ஆம் தேதி முதல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜியோவின் இலவச சேவைகளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.

மேலும், ஏப்ரல் 15-ஆம் தேதி தான் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணையும் கடைசித் தேதி என்றும் அறிவித்தார். அத்துடன் நில்லாமல் வழங்கப்பட்டுள்ள இந்த 15 நாட்களுக்குள் ஜியோ ப்ரைம் மெம்பராக இணைந்தால் ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை அனுபவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை என்றால் என்ன.? அதன் நன்மைகள் என்னென்ன.? முக்கியமாக நாம் யூகிக்க வேண்டிய பின்னணிகள் என்ன.?

சம்மர் சர்ப்ரைஸ் சலுகை

சம்மர் சர்ப்ரைஸ் சலுகை

ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையில் கீழ் ப்ரைம் சேவையில் இணைந்த வாடிக்கையாளர்கள் ரூ.303/- திட்டம் அல்லது அதற்கு மேலான எந்தவொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது ஜியோவின் வழக்கமான இலவச சேவைகளை அனுபவிக்க முடியும்.

ஏப்ரல், மே மற்றும் ஜூன்

ஏப்ரல், மே மற்றும் ஜூன்

அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் வரையிலாக ஜியோ வழங்கி வந்த அதே ஹேப்பி நியூ இயர் சலுகையை சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரின் கீழ் ரூ.303/- என்ற ஆரம்ப கட்டண சலுகையில் கீழ் தொடர்ந்து பெறலாம்.

இது திடீர் அறிவிப்பா.?

இது திடீர் அறிவிப்பா.?

நேற்று ஜியோ ப்ரைம் சேவைக்கு மாற முயற்சி செய்த பல பயனர்களுக்கு தோல்வியும், வெறுப்பும் தான் மிச்சம் ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக ஆன்லைன் மிக டிராபிக் அதிகமாக இருந்ததால் ஜியோ.காம் தொடங்கி ஜியோ மணி ஆப் மட்டுமின்றி பேடிஎம்,ப்ரீசார்ஜ் என அனைத்திலுமே சர்வர் சுமை ஏற்பட பெரும்பாலானோர்களால் ஜியோ ப்ரைம் திட்டத்தில் நேற்று சேர முடியவில்லை.

நம்பும்படி இல்லை

நம்பும்படி இல்லை

ஆக, பல பயனர்கள் ஜியோ ப்ரைம் சேவையில் இணைய விரும்புவதை உணர்ந்து கொண்ட நிறுவனம் இப்படியொரு திடீர் இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று கூறினால் நம்பும்படி இல்லை.

இலவசம் டூ கட்டண சேவை

இலவசம் டூ கட்டண சேவை

இது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு அறிவிப்பாகும். ஒரு அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ ஒரு மாதத்தில் 72 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்ததாக கூறியிருந்தது. தொலைத்தொடர்பு வரலாற்றில் ஒரு குறுகிய காலத்தில் இலவசம் டூ கட்டண சேவைக்கு இவ்வளவு பெரிய இடம்பெயர்வு நடந்ததை பெருமையாக பேசிக் கொண்டாலும், மறுபக்கம் ஜியோவின் ஒட்டுமொத்த பயனர்களோடு ஒப்பிடும் பொது இந்த எண்ணிக்கை குறைவு தான்.

இராஜ தந்திரமான திட்டம்

இராஜ தந்திரமான திட்டம்

இதுபோன்ற இடைவெளி ஏற்பட மாற்று வழியாக செயல்படுத்த ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஒரு இராஜ தந்திரமான திட்டம் தான் இப்போது வெளியாகியுள்ளன சம்மர் சர்ப்ரைஸ் சலுகை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் முன்புபோல் முற்றிலும் இலவசமாக அல்லாது, பயனர்களை ரூ.303/- என்ற ஆரம்ப கட்டண சேவையை அணுக வைப்பதோடு, ஜியோ ப்ரைம் சேவையிலும் மக்களை இணையச்செய்ய ஒரு அன்பான கட்டளையை ஜியோ விதிக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து பயனர்களையும்

கிட்டத்தட்ட அனைத்து பயனர்களையும்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல பயனர்களை இலவச சேவையில் இருந்து கட்டண சேவைக்கு கொண்டு வந்தாகியும் விட்டது மறுபக்கம் அதன் ஜியோ ப்ரைம் திட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களை சேர்க்க ஒரு மாபெரும் வழியையும் ஜியோ நிறுவனம் உண்டாக்கி விட்டது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

புதிய விதிமுறைகள் & நிபந்தனைகளின் கீழ் குறைக்கப்படும் ஜியோ நன்மைகள்.!?

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Prime Plan Last Date Extended to April 15, Jio Summer Surprise Announced. Read more about this is in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X