கையில் வெடித்துச் சிதறிய ஜியோ ஸ்மார்ட்போன்.!!

Written By:

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது இன்று சாதாரண விடயமாகி விட்டது. வெடிக்காத வரை அதன் ஆபத்துக்களை யாரும் அறிந்து கொள்வதில்லை. எவ்வளவு சரியாகப் பயன்படுத்தினாலும் தயாரிப்பு பணிகளில் கோளாறு இருந்தாலோ அல்லது பேட்டரி பாழானாலோ கருவிகள் நிச்சயம் வெடிக்கத் தான் செய்யும்.

உலகின் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் கருவிகள் வெடித்துச் சிதறுவது அடிக்கடி அரங்கேறும் சம்பவம் தான்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எதிர்பார்ப்பு

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிக எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் இலவசங்களின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிக எதிர்பார்ப்புகளினால் ஜியோ சிம் கார்டுகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்

இந்நிலையில் ஃபேஸ்புக் பயனர் ஒருவர் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதன் படி தான் பயன்படுத்தி வந்த லைஃப் வாட்டர் 1 கருவி வெடித்துச் சிதறியதாக குறிப்பிட்டுள்ளார்.

லைஃப் வாட்டர் 1

அதன் படி லைஃப் வாட்டர் 1 கருவியில் ஃபேஸ்புக் பயன்படுத்திய போது திடீரென தனது கருவி வெடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருவி வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவில்லை.

சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவி வெடித்துச் சிதறிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கருவிகளைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது போல் ஒன்பிளஸ் 3 மற்றும் ஐபோன் கருவிகளும் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Reliance Jio Smartphone Explodes In User's Hand Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்