ரிலையன்ஸ் ஜியோ இலவச சிம் கார்டு : புதிய சிக்கல்.??

Written By:

ரிலையன்ஸ் ஜியோஒட்டு மொத்த இந்தியாவையும் கவர்ந்து விட்டது எனலாம். முதல் மூன்று மாதங்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வரவேற்பினை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் துவங்கியதில் இருந்து ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களிலும் இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை வாங்க மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அளவு

அழைப்பு கட்டணங்கள் உலகளவில் குறைவாக இருக்கும் நிலையில், டேட்டா கட்டணம் இந்தியாவில் குறைவாக அதாவது 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா கட்டணம் ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைவு

குறைந்த கட்டணம் என்ற காரணம் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டுகளுக்கான தேவை அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றது. இலவசமாகக் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைத் தற்சமயம் வரை சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இலவசம்

இலவச சிம் கார்டு வாங்கும் போது அன்-லிமிட்டெட் 4ஜி இண்டர்நெட், வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சேவைகள் சுமார் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சான்று

பயனர்கள் தங்களது அடையாள சான்றிதழ்களை வழங்கி அதிகாரப்பூர்வ ரிலையன்ஸ் விற்பனை மையங்களில் இலவச சிம் கார்டினை பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டணம்

அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பின் ஜியோ 1ஜிபி 4ஜி டேட்டா கட்டணம் என்னவென்று யாருக்கும் தெரிந்திராத நிலையில் அனைவரும் மூன்று மாத இலவச டேட்டா மற்றும் இதர சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.

வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையானது இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Reliance Jio SIM in Demand as many Queue Up Across the Country Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்