ரூ.500/- கள்ளச் சந்தையில் ஜியோ சிம் பரபரப்பான விற்பனை!?

ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக அறிவித்த ஜியோ சிம் கார்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன..

Written By:

கால் டிராப் மற்றும் வேகம் குறைவு போன்ற குற்றச்சாட்டுகளை கடந்து ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக வழங்குவதாக அறிவித்த ஜியோ சிம் கார்டுகள் ரூ.50 முதல் ரூ.500 வரை என்ற கட்டணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சேவை

ஜியோ அறிவித்த 4ஜி சிம் கார்டுகளுடன் அறிமுக சலுகையின் படி அன்-லிமிட்டெட் எச்டி வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால், அன்-லிமிட்டெட் எஸ்எம்எஸ் மற்றும் அதிவேக இண்டர்நெட் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தட்டுப்பாடு

இலவசமாகக் கிடைப்பதால் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு அதிகப்படியான தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகத் தற்சமயம் இவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கட்டணம்

இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் ரூ.50 முதல் ரூ.500 வரை கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிம் கார்டு

தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஸ்டோர்களிலேயே ஜியோ சிம் கார்டுகள் கட்டண அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசம்

ரிலையன்ஸ் ஜியோ சிம் வழங்கி வரும் சேவைக்கு ஒரு முறை தானே என்ற அடிப்படையில் மக்கள் கட்டணம் செலுத்தி சிம் கார்டுகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் சேவையினை வேகமாக ஆக்டிவேட் செய்வதற்கும் தனி கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Reliance Jio SIM cards sold in black market for Rs 500
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்