4ஜி போட்டியில் ரிலையன்ஸ் ஜியோ.!!

Written By:

இந்தியாவில் 3ஜி சேவையை தொடர்ந்து 4ஜி நெட்வர்க் சேவையை வழங்க பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன என்று தான் கூற வேண்டும். 'பல இடங்களில் 3ஜி சேவையை சிக்கலில் இருக்கும் போது 4ஜி வந்தால் என்ன வராட்டி என்ன', என்பதே மக்கள் கருத்தாக இருக்கின்றது. 

இந்நிலையில் 4ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் நேரடி போட்டியில்  இறங்கியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஒப்பந்தம்

அதன் படி டவர் விஷன் நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்தி கொள்ள ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டவர் விஷன் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஏரியா

சிறப்பான 4ஜி சேவையை வழங்கிட சொந்தமாகவும், வாடகை முறையிலும் பல்வேறு டவர்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முயற்சி

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே டவர் விஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டவர்

இந்தியாவில் மொத்தம் 8400 டவர்களை டவர் விஷன் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கின்றது.

சிக்னல்

டவர் விஷன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தடையில்லா இண்டர்நெட் வழங்க ஏதுவாக இருக்கும் என டவர் விஷன் நிறுவனத்தின் தலைவர் அமித் ஞானி தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம்

சமீபத்திய ஒப்பந்தத்தின் படி RJIL (ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்) நிறுவனம் மொத்தமாக 1,88,400 மொபைல் டவர்களை பயன்படுத்தும்.

நிறுவனம்

அதன் படி RJIL நிறுவனம் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வியோம் நெட்வர்க், அமெரிக்கன் டவர் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

டவர்

பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி RJIL சுமார் 82,000 மொபைல் டவர்களையும், ஆர்காம் நிறுவனத்தின் 45,000 டவர்களை பயன்படுத்துவதோடு வியோம் மற்றும் ஏடிசி நிறுவனங்களுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களின் படி முறையே 42,000 மற்றும் 11,000 மொபைல் டவர்களை பயன்படுத்துகின்றது.

ஸ்பெக்ட்ரம்

4ஜி சேவையை வழங்க RJIL நிறுவனம் பேன் இந்தியா ப்ராட்பேன்ட் வர்லெஸ் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துகின்றது. உலகம் முழுக்க 4ஜி சேவை வழங்க பயன்படுத்தப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளையும் RJIL நிறுவனம் வைத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

உரிமம்

இந்தியா முழுக்க 22 பகுதிகளிலும் 4ஜி சேவை வழங்கும் உரிமத்திற்கான ஒட்டுமொத்த உரிமத்தையும் வைத்திருக்கும் ஒரே நிறுவனமும் RJIL ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் மட்டுமே.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Reliance Jio signs mobile towers deal with Tower Vision for its 4G network. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்