ஏர்டெல்'ஐ விடக் குறைவான வேகம் வழங்கும் ஜியோ : ஆய்வில் தகவல்!

மிகுந்த ஆர்வத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வாங்கிய பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

Written By:

அதிக எதிர்பார்ப்பகளுடன் சந்தையில் களமிறங்கி முதல் மூன்று மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேகம் குறைந்து வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இதனை உறுதி செய்யும் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை 4ஜி டேட்டா வேகம் ரிலையன்ஸ் ஜியோ டேட்டா வேகத்தை விடக் குறைவு எனச் சமீபத்திய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் 17 டெலிகாம் வட்டாரங்களில் ஜியோ டேட்டா வேகம் ஏர்டெல் வழங்குவதை விடப் பாதி அளவு குறைவு என CLSA ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வேகக் கணக்கீடு

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 3ஜி மற்றும் 4ஜி மொபைல் டேட்டா வேகங்களை முறையே சுமார் 0.5 மில்லியன் மற்றும் 2.5 மில்லியன் தரவுகளைக் கொண்டு சோதனை செய்தது.

வேகம்

ரிலையன்ஸ் ஜியோ டேட்டா வேகம் நொடிக்கு 6 எம்பி வரை இருந்தது, இவை ஐடியா செல்லுலார், மற்றும் வோடபோன் வழங்கும் சீரான வேகத்தை ஒற்றிருந்தது. பாரதி ஏர்டெல் வேகம் நொடிக்கு 11.5 எம்பி வரை இருப்பதாக CLSA ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவு

பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் சேவைகளை வைத்துப் பார்க்கும் போது ரிலையன்ஸ் ஜியோ நெட்வர்க் வேகம் 20% வரை குறைந்திருக்கின்றது தெரியவந்திருக்கின்றது. செப்டம்பரில் நொடிக்கு 7.2 எம்பி வரை இருந்த வேகம் தற்சமயம் நொடிக்கு 6.0 எம்பி வரை இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

மேம்பாடு

அக்டோபர் மாதத்தைப் பொருத்த வரை ஏர்டெல் நிறுவனம் 4ஜி வேகத்தினை அதிகப்படுத்தியது. 22 வட்டாரங்களில் 19 வட்டாரங்களில் 4ஜி சேவைகளை மேம்படுத்தியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ வேகம் 17 வட்டாரங்களில் நொடிக்கு 6 எம்பி அளவு குறைந்து இருப்பது தெரியவந்திருக்கின்றது. இது ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் வழங்கும் வேகங்களுக்குச் சமமான அளவு ஆகும்.

தரம்

நாட்டின் மிகப்பெரிய நான்கு நிறுவனங்களில் பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் தங்களது 4ஜி வேகங்களை மேம்படுத்தியோ அல்லது அதிகரிக்கவோ செய்திருக்கின்றன, வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வேகம் குறைந்திருப்பது டிராய் அறிக்கையில் தெரிய வருகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Reliance Jio's 4G speed is now almost half of Airtel 4G speed
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்