ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று பிளான்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று பிளான்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

இந்திய தொலைத்டொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்றால் அது மிகையில்லை. இந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி தற்போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய சந்தா திட்டம் என்னும் இந்த திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்

ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று பிளான்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானவுடன் ஏற்கனவே தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்ட பறந்த ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஆர்கோ, ஏர்செல் மற்றும் பிற நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின.

வெல்கம் சலுகை என்ற அதிரடி திட்டத்துடன் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி அளவில்லா அழைப்பு மற்றும் இண்டநெட்டை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று பிளான்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

எந்த ஒரு இலவச சலுகையாக இருந்தாலும் டிராயின் விதிப்படி மூன்று மாதங்கள் மட்டுமே செயல்படுத்த அனுமதிக்கப்படும் இதன்படி கடந்த டிசம்பர் மாதம் இந்த வெல்கம் திட்டம் முடிவுக்கு வரும் நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை முகேஷ் அம்பானி அறிமுக செய்தார். இந்த திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம் இருந்தது.

முந்தைய திட்டத்தில் இருந்த அளவில்லா இண்டர்நெட் என்பது நாள் ஒன்றுக்கு ஒரு GB மட்டுமே பயன்படுத்தும் வகையில் குறைக்கப்பட்டது. ஒரு GBக்கு மேல் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். இருப்பினும் அளவில்லா இலவச அழைப்பு இந்த திட்டத்திலும் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

இந்த புதிய திட்டத்தின்படி இரண்டு முறைகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரூ.50க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு 4GB டேட்டா கூடுதலாக பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது இலவச டேட்டாவுடன் சேர்த்து 5GB பயன்படுத்தலாம்.

அதேபோல் ரூ.301க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு கூடுதலாக 6GB அளவிற்கு 4G இண்டர்நெட்டை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த திட்டமும் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் ஹேப்பி நியூ இயர் பிளான் முடிவடைந்ததும் ரிலையன்ஸ் ஜியோ பயனாளிகல் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில் ரூ.99 கொடுத்து சந்தாதாரராக பதிவு செய்ய வேண்டும்.

நம்ம சென்னையில் ரிலையன்ஸ் ஜியோ கேப்ஸ் - விரைவில்.!

சந்தாதாரர் ஆகிய பின்னர் மாதம் ஒன்றுக்கு ரூ.303 கட்டணமாக செலுத்தினால் நீங்கள் ஹேப்பி நியூ இயர் திட்டத்தில் அனுபவித்த சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு GB டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகளை ரூ.303க்கு பெற்றுக் கொள்ளலாம்

ஒருவேளை ரூ.301க்கு கட்டணம் செலுத்த விருப்பமில்லை என்றால் அவ்வப்போது தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளவும், ஏற்கனவே இருக்கும் போஸ்ட் பெய்ட் திட்டங்களையோ தேர்வு செய்தும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Reliance Jio Prime Subscription Plan vs Happy New Year Offer: Here's the difference
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்